தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்
DrJ.R.SIVARAMAKARISHNAN, ASSISTANT PROFESSOR IN HISTORY KUNTHAVAI NAACCHIYAAR GOVT.ARTS COLLEGE THANJAVUR-7 முன்னுரை தமிழகத்தில் பாயும் நதிகளினால் பெறப்படும் பாசனம் எதிர் காலங்களில் நிலையற் றதாகும் என்பதை உணர்ந்தவர்கள் தமிழ் மன்னர்கள். அதனால்தான் காடு கொன்று நாடாக்கும் பொழுது ஆங்கு குளங்களை வெட்டி நீர்வளத்தை பெருக்கினர். மேலும் பருவக் காலங்களில் மட்டுமே கிடைக்கும் மழை நீரை எந்தவித சேதாரமின்றி அதை ஓரிடத்தில் நிலையாக சேமித்து வருடம் முழுவதும் பயன்படுத்தி விவசாயம் மற்றும் குடிநீர் தேவையில் தன்னிறைவையும், உணவு உற்பத்தியில் உயர்வையும் பெற்று விளங்கினர். இப்படிப்பட்ட பண்டைய தமிழ் மக்களின் நீர்மேலாண்மை நுட்பக் கூறு களை பற்றி விரிவாக விவாதிப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். நீர்நிலைகள் ஏற்படுத்துதல் அறமே நீரின்றி அமையாது உலகு என்ற வள்ளுவனின் கருதுகோளுக்கு ஏற்ப நீர்நிலை களை ஏற்படுத்துவது சிறந்த அறமென கருதவேண்டும் என்பதை சங்க இலக்கியங் களின் ஊடாக உணரமுடிகிறது. குறிப்பாக குளம் வெட்டுதல், அதனைச்சுற்றி மரக்கி ளைகளை நடுதல், மக்கள் நடக்கும் வழியை செதுக்கிச் சீர்திருத்துதல், த
Comments
Post a Comment