ஆடிப்பெருக்கு

                                        


ஆடிப்பெருக்கு

 

சங்க இலக்கியமான பரிபாடலில் இருந்து ஒரு பாடல்... எண்..11..

 

வைகை ஆற்றில் தண்ணீர் வரும் காலத்தை இப்பாடல் கூறுகிறது..

 

விரி கதிர் மதியமொடு, வியல் விசும்பு புணர்ப்ப

 எரிசடை எழில் வேழம் தலையெனக் கீழ் இருந்து

 தெரு இடைப்படுத்த மூன்று ஒன்பதிற்று இருக்கையுள்..

உருகெழு வெள்ளி வந்து ஏற்றியல் சேர

 வருடையைப் படிமகன் வாய்ப்ப பொருள் தெரி

 புந்தி மிதுனம் பொருந்த, புலர் விடியல்

 அங்கி உயர் நிற்ப, அந்தணன் பங்குவின்

 இல்லத் துணைக்கு உப்பால் எய்த இறை யமன்

 வில்லின் கடை மகரம் மேவ, பாம்பு ஒல்லை

 மதியம் மறைய, வரு நாளில்வாய்ந்த

 பொதியில் முனிவன் புரை வரைக் கீறி

 மிதுனம் அடைய, விரி கதிர் வேனில் 

 எதிர் வரவு மாரி இயைக. என இவ் ஆற்றால் 

 புரை கெழு சையம் பொழி மழை தாழ,

 நெரிதரூஉம் வையைப் புனல்.."

 

பாடலுக்கானப் பொருள்..

 

விரி கதிர்களையுடைய மதியத்தோடு அகன்ற வானத்து ....( சூரியனும் சந்திரனும் இருக்கும் வானத்தில்) 

எரிசடையுடைய அழகிய வேழம்  போன்றவன்.

தலைமை கொள்ள... அவனுக்கு கீழ் இருந்த தெருவானது மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டது.

அந்த மூன்று வீதிகளில் ஒவ்வொன்றும் ஒன்பது நட்சத்திரங்களின் இருக்கையை பெற்றிருந்தது..

( ஆக 3 × 9 = 27 நட்சத்திரம். )

 

வெள்ளி என்னும் சுக்ரன் ஏற்றியல் என்னும் ரிஷப ராசியில் இருக்கசெவ்வாய் மேடத்தில் இருக்கபொருள் தெரிந்த புதன் மிதுன இராசியில் இருக்க,  

புலர்கின்ற விடியலுக்குச் சொந்தமான சூரியன் தனக்குரிய வீடான சிம்மத்துக்கு மேல் வீடாகிய கடகத்தில் இருக்கஅந்தணணாகிய குரு சனியின் மகரவீட்டிற்கு அடுத்த வீடான கும்பத்திற்கு அடுத்து இருக்கும் மீனத்தில் இருக்கவிதிகாரன் யமன் சனி தனுசுக்கு அடுத்த மகரத்தில் இருக்கபாம்பான இராகு சந்திரனுடன் மகரத்திலும்..

.இவ்வாறக அமைந்த ச

 நாளில்,பொதிகை முனிவனுக்கு உரியதான மலையில் ( மேற்கு தொடர்ச்சி மலை)

காற்று தென்கிழக்குத்

திசையில் வீச, சூரியனின் கதிர்கள் விரிந்த வெயில் காலத்தை வெல்லும் பொருட்டு மலைப்பகுதியிடத்தே பெரும் மழை பெய்து வையை ஆற்றில் புதுப்புனல் வந்தது..

 

அடடா....

ஒரு இராசிக்கட்டத்தையே இப்பாடல் பதிவு செய்கிறது..

 

வானவீதி.. 

27 நட்சத்திரம்.. 

9 கிரகம்..

12 ராசி.

தென்மேற்கு பருவக் காற்று.. அது வீசும் திசை..

 

என்னவொறு துல்லியமான தமிழர்களின் வானவியல் அறிவு..

 

இப்பாடலில் அமைந்த கிரகநிலையை கணக்கீடு செய்த பேராசிரியர் வையாபுரிபிள்ளை இதன் காலம் 

கி.பி.634 என்கிறார்..

( History of Tamil language and literature)

 

பரிபாடலின் காலம்  கி.பி.3 ஆம் நூற்றாண்டு என்று ..

பேராசிரியயர் இராசமாணிக்கனார் தான் எழுதிய கால ஆராய்ச்சி என்னும் நூலில் நிறுவுகிறார்..

 

காலம் எதுவோ....

 

இந்த கிரகநிலை 

ஆடி மாதம் 18 ஆம் தேதி..  ஆடிப்பெருக்கு நாள் என்கிறார் புலியூர் கேசிகன்..

 

நண்பர்கள் அனைவருக்கும் ஆடிப்பெருக்கு நல்வாழ்த்துகள்...

 

THANK YOU..

மா.மாரிராஜன்..

 

Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

கல்வெட்டில் குற்றம், தண்டனை, தீர்வு