கரந்தைச் செப்பேடு
கரந்தைச் செப்பேடு
பண்டிதசோழன்
கரந்தைச் செப்பேட்டின் 42 ஆவது செய்யுள்
ராஜேந்த்ர சோழன் சிறுவயதில் பெரும் அறிவைப் பெற்றிருந்தான் என்பதைக் காட்டுகிறது.
स बाल
एवाखिलवेदशास्त्रवित्
तुरङ्गमातङ्गरथाधिरोहणे।
कृतश्रमः
शस्त्रविदस्त्रकोविदः
गुणैरुदारैः प्रकृतिप्रियोभवत्।।
ஸ பா³ல ஏவாகி²லவேத³ஶாஸ்த்ரவித்
துரங்க³மாதங்க³ரதா²தி⁴ரோஹணே।
க்ருதஶ்ரம꞉ ஶஸ்த்ரவித³ஸ்த்ரகோவித³꞉
கு³ணைருதா³ரை꞉ ப்ரக்ருதிப்ரியோப⁴வத்॥
அவன் சிறுவனாக இருக்கும்போதே எல்லா
வேதங்களையும் சாஸ்த்ரங்களையும் அறிந்தான். குதிரை யானை தேர் இவற்றில் ஏறுவதில்
வெகுபயிற்சி பெற்றான். ஆயுதங்களையும் அஸ்த்ரங்களையும் அறிந்தான். தனது
பெருந்தன்மையான குணங்களால் மக்களுக்கு விருப்பமானவனாக இருந்தான்.
இதனால் இடைக்காலத்தில் அரசர்கள் வேத
சாஸ்த்ரங்களைக் கற்றமையும் பண்டிதராகவும் திகழ்ந்தமையும் தெளிவாகிறது.
Comments
Post a Comment