சிவலிங்கம்

 

                     சிவலிங்கம்



 பொயுமு187- இல் மௌர்ய பேரரசின் வலிமையற்ற வேந்தனான ப்ரஹத்ரதனைக் கொன்று விட்டு தளபதியாக இருந்த புஷ்யமித்ரன் அரசனான். இவனில் துவங்கிய சுங்க வம்சம் அந்தப் பேரரசை நூற்றுப்பத்து ஆண்டுகள் நடாத்தியது. மௌர்யர்கள் பரப்பியிருந்த பௌத்தத்தை நீக்கிய செயல் இவர்களுடையதே. புஷ்யமித்ரனின் மகனான அக்னிமித்ரனே காளிதாஸனால் தனது மாளவிகாக்னி மித்ரத்தில் கொண்டாடப்பெற்றவன். இவர்கள் காலத்தில் பலவிதமான வழிபாடு தொடர்பான கற்பலகைகள் கிடைக்கின்றன. மதுராவில் கிடைத்த இந்த இரண்டு கற்பலகைகளும் மிக இன்றியமையாதவை. ஒரு பலகையில் லிங்க வழிபாடு தெற்றென விளக்கப்பெற்றிருக்கிறது. கின்னரர்கள் இருபுறமும் மாலையேந்தி நிற்க நடுவே மரத்தடியில் சிவலிங்கமானது வீற்றிருக்கிறது. மற்றொரு கற்பலகையில் ஏகமுக லிங்கமானது வீற்றிருக்கிறது. இதுவும் மரத்தடித் திண்ணையில் வீற்றிருக்கும் வண்ணம் அமைந்திருக்கிறது. இவையிரண்டும் பொதுயுகத்திற்கு முன்பு லிங்க வழிபாடு எப்படியிருந்திருக்கும் என்பதற்கு அடையாளமாக அமைந்துள்ளன.




 

Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

கல்வெட்டில் குற்றம், தண்டனை, தீர்வு