பூஜ்யம்

 


பூஜ்யம்

இந்தியாவில் கல்வெட்டுக்களில் பூஜ்யம் கிடைப்பது பொயு ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்துதான். க்வாலியரில் உள்ள கல்வெட்டு பூஜ்யத்தைக் கொண்டிருக்கிறது. அதற்கு முன்னர் பூஜ்யத்தை எப்படி எழுதியிருப் பார்கள். விடைதருகிறது ஸுபந்து என்பார் இயற்றிய வாஸவதத்தம் என்னும் உரைநடைக் காப்பியம். 

விஶ்வம் கணயதோ தாது​: ஶஶிகடினீகண்டேன தமோமஷீயாமே அஜின இவ வியதி ஸம்ஸாரஸ்ய அதிஶூன்யத்வாத் ஶூன்யபிந்தவ இவ விலிகிதா​: தாரா வ்யராஜந்த|

 

என்று ஆகாயத்தை வர்ணிக்கிறார் கவிஞர். நான்முகன் உலகை எண் ணினானாம். அதை ஆகாயமாகிய தோலில் இரவாகிய மையைத் தடவி பிறைநிலவாகிய சுண்ணக்கட்டி கொண்டு எழுத நினைத்தானாம். அப்போது இந்த ஸம்ஸாரமே சூன்யம் என்பதைச் சுட்டிக்காட்ட சுழிக ளாக போட்டவையே விண்மீன்களாகத் திகழ்ந்ததாம்.

 

கற்பனை இருக்கட்டும். இதன் காலம் பொயு 5-6 என்பதால் அப்போதும் பூஜ்யம் சுழியாக எழுதப்பெற்றமை தெளிவாகிறது. மேலும் தோலில் மை தடவி சுண்ணக்கட்டி கொண்டு எழுதும் பழக்கம் இருந்தமையும் அறியக்கிடக்கிறது.

 

Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

கல்வெட்டில் குற்றம், தண்டனை, தீர்வு