Posts

Showing posts from 2017

தி.வை. சதாசிவ பண்டாரத்தார்

Image
முனைவர் J.R. சிவராமகிருஷ்ணன்  வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர்   அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி  ஆத்தூர்                   தி. வை . சதாசிவ பண்டாரத்தார்       ஒரு நாட்டின் வரலாறு அந்நாட்டு மக்களின் தாய்மொழியில் வெளி யிடப்பட்டால்தான் அந்நாட்டு மக்கள் அவற்றை ஆர்வத்துடன் படித்துணர முடியும். இதனையே அடிப்படை காரணமாக கொண்டு தமிழகத்தில் தோன் றிய பல தமிழ் அறிஞர்கள் தமிழர் வரலாறு , பண்பாட்டு , கலாச்சாரம் , சமூககட்டமைப்புகள் , உலக மக்களுடன் கொண்டிருந்த வர்த்தக உறவு , பண்டையகால மன்னர்கள் கப்பற்படை வலிமையால் கிழக்காசிய நாடுகளை தமது ஏகதிபத்தியத்தின் கீழ் வைத்திருந்தது போன்ற தமிழர் பெருமைகளை சுதந்திரதிற்கு முன்பிருந்தே எழுதி வந்ததனர். அவைகளை படித்த தமிழர்கள் எங்கிருந்தோ வந்த அன்னியர்கள் நம்மை ஆள்வதா என்ற உணர்வு மக்களி டையே காட்டுத்தீ போல பரவகாரணமாக இருந்தது. அதோடு மட்டுமன்றி இந்திய சுதந்திர போராட்ட கலத்தில் தமிழர்கள் உத்வேகத்துடன் குதிப் பதற்கும் காரணமாக அமைந்தது. சுதந்திரக்கு  முன்பும் பிறகும் ஏராளமான தமிழ் நூல்க...

கங்கைகொண்ட சோழபுரம்

Image
கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சுடுமண் உறை கிணறு முனைவர் ஜெ.ஆர். சிவராமகிருஷ்ணன் , உதவிப்பேராசிரியர் , வரலாற்றுத்துறை , அரசு கலைக் கல்லூரி - ஆத்தூர் .         அரியலூர் மாவட்டம் உடையார்குடி வட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் பாண்டியன் என்பவர் தமது நிலத்தை சீர் செய்யும் பொழுது திடீர் என மேல்மண் உள் வாங்கியது. அப்பள்ளத்தில் வட்டவடி விலான உறைகள் காணப்பட்டன . உடனே கங்கை கொண்ட சோழபுர அருங்காட்சிய காப்பாட்சியரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் காப்பாட்சியர் பிரபாகரன் , கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியக மேம்பாட்டு குழு தலைவர் இரா. கோமகன் மற்றும் ஆத்தூர் அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப்பேராசிரியர் ஜே.ஆர். சிவராமகிருஷ்ணன் ஆகியோர் அவ்விடத்திற்கு சென்று ஆய்வை மேற்கொண்டனர்.   சுடுமண் உறைகிணறு             பள்ளம் ஏற்பட்ட இடத்தில் தரைதளத்தில் இருந்து இரண்டடி ஆழத்தில் வட்ட வடிவிலான சுடுமண் உறைகள் காணப்பட்டன. அவைகளை ஆய்வு செய்ததில் இப்பகுதியில் வாழ்ந்த பண்டைய கால ம...

பெருமாள் ஏரி

Image
முனைவர் ஜெ.ஆர். சிவராமகிருஷ்ணன் உதவிப் பேராசிரியர்   அரசு கலைக் கல்லூரி  ஆத்தூர்.     குறுநில மன்னன் வெட்டிய பெருமாள் ஏரி                             கடலூர் மாவட்டம் சுமார் சுமார் பத்தாயிரம் ஆண்டுகால வரலாற்று சிறப்பை கொண்ட பகுதியாகும். சங்ககால முதல் கிரேக்கர்கள் , ரோமானியர்கள் , அரேபியர்கள் , சீனர்கள் போன்றோர் இம்மாவட்டத்தில் உள்ள மக்களுடன் நேரடி வணிகதொடர்பை கொண்டிருந்தனர் என்பதற்கு ஏராளமான தொல்லியல் சான்றுகள் கடலூர் மாவட்டத்தில் கிடைத்துள்ளன. அதன் அடிப்படையில் கி.பி. 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கடல் மார்க்கமாக முதன்முதலில் வர்த்தகம் செய்ய வந்தவர்கள் போர்ச்சிகீசியர்கள் மற்றும்  டச்சுகாரர்கள் ஆவர். ஆனால் கி.பி. 16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமது ஏகாதிபத்திய கொள்கையினால் கடலூர் பகுதி முழுவதையும் தமது வாணிப ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தது ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி. இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற சுதந்திர போராட்ட காலத்தில் காந்தியடிகள் கடலூ...

இந்திய தொல்பொருள் துறையின் திருச்சி வட்டம்

இ ந்திய தொல்பொருள் துறையின் திருச்சி வட்டம் ( CIRCLE ) தொடங்கப்பட வேண்டும் – ஆய்வாளர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை    Dr J.R.SIVARAMAKARISHNAN                         இந்திய தொல்பொருள் துறை தென்னிந்தியாவில் உள்ள நமது பாரம்பரி யம் மிக்க புரதான சின்னங்களை புதுப்பித்தல் மற்றும் மீட்டெடுத் தலுக்காக ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள வரலாற்று பெருமைமிக்க இடங்களை தேர்வு செய்து அவைகளை தமது நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து பாதுகாத்து வருகிறது. மேலும் நிர்வாக நலனுக்காக பல வட்டங்களாக பிரித்து தமது பணியை செவ்வன செய்துவருகிறது. குறிப்பாக கர்நாடக மாநி லத்தில் இந்திய தொல்பொருள் துறையினர் 747  இடங்களை பாரம்பரி யம் மிக்க இடங்களாக தேர்வு செய்து அவைகளை இரண்டு வட்டங்களாக பிரித்து பாதுகாத்து வருகிறது . இதற்காக பெங்களூர் வட்டத்தில் உள்ள 207 பாரம்பரியம் மிக்க வரலாற்று சின்னங்களை புதுப்பித்தல் மற்றும் மீட்டெ டுத்தல் பணிக்காக ஆண்டு ஒன்றிற்கு எட்டு கோடி ரூபாய்யும் , தார்வாடு வட...

அச்சுத மங்கலம் கல்வெட்டுக்கள்....

Image
            அச்சுத மங்கலம் கல்வெட்டுக்கள்....                   Dr J.R.SIVARAMAKARISHNAN           பண்டையத் தமிழார்தம் வரலாறு , பழக்க வழக்கங்கள் , பண் பாடு ,  வாழ்வியல் நெறிமுறைகள் ஆகியவற்றை நாம் அறிந்து கொள்ள தற்கு தொல்லியல் சான்றுகள் எவ்வாறு உதவி புரிகின்றனவோ அதே போல் கல்வெட்டுக்களும் அக்கால வினோத நிகழ்வுககளை படம்பிடித்து காட்டும் கண்ணாடிகலாகவும் விலங்குகின்றான. அப்படிப்பட்ட கல்வெட் டுக்களில் கற்பனைக்கோ , கட்டுக்கதைகளுக்கோ இடமில்லை எனலாம். அவற்றில்  உள்ளதை உள்ளவாறு உணர்த்துகின்ற உண்மைக்கு மட்டுமே இடமுண்டு. அந்த அடிப்படையில் பண்டைய காலத்தில் அரசு எடுத்த முடிவில் மக்களின் நலன் எந்தவிதத்திலும் பாதிக்கக்கூடது என்ற அறக் கோட்பாட்டானது எவ்வாறு பின்பற்றப்பட்டுள்ளது என்பதை திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் உள்ள அச்சுத மங்கலம் என்ற ஊரில் உள்ள சோமனாதசுவாமி கோயில் கல்வெட்டின் வாயிலாக அறியமுடிகிறது. பெருவழிகள்        தற்கா...

மணிக்கொல்லை - கல் மணிகள்

Image
கிளியோபாட்ராவின் மேனியை அலங்கரித்த கடலூர் கல் மணிகள்  முனைவர் ஜெ.ஆர். சிவராமகிருஷ்ணன் , உதவிப் பேராசிரியர் , வரலாற்றுத்துறை , அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி – ஆத்தூர்.                                  ‘’அலைகடல் நடுவுள் பலகலஞ்செலுத்தித் திரைகட லோடித் திரவியம் தேட’’ முனைந்த நம் பண்டைய தமிழர் கிரேக்கம் , ரோமபுரி , சீனம் , எகிப்து , பாலஸ்தீனம் , மொசபடோமியா , பாபிலோனியா, அரேபியா , மலாயா , இந்தோனேசியா , ஜாவா , தாய்லாந்து , இலங்கை போன்ற அயல் நாடுகளுடன் வாணிபத் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு தமது மற்றும் தம் நாட்டின் பொருளாதார நிலையை அந்நிய செலாவணி மூலம் உயர்த்திக் கொண்டு , பிறநாடுகளில் தாம் கற்ற உயர்ந்த பண்பியல் மற்றும் பண்பாட்டுக் கூறுகளை , தம்மை சார்ந்த மக்களுக்கும் கொடுத்து  அவர்களையும் பண்பாட்டுரீதியாக உயர்தியமை போற்றத்தக்க ஒன்றாகும் . மேலும் தமிழர்களின் வாணிபம் சிறப்புற்று இருந்தமைக்கு அவர்கள் பின்பற்றிய ‘’ கொள்வதூம் மி...

கழிவுநீர் வடிகால்கள்

Image
இப்போதைய தேவை முறையான கழிவுநீர் வடிகால்களே முனைவர் ஜெ.ஆர். சிவராமகிருஷ்ணன் , உதவிப் பேராசிரியர் , வரலாற்றுத்துறை , அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி – ஆத்தூர்.                    உலக மக்களின் அன்றாட தேவைகளில் முதன்மையான பொருளாக விளங்குவது தண்ணீராகும் . அதனால்தான் பண்டையகால மக்கள் நீர் வளம் மிகுந்த இடங்களான ஆற்றங்கரை ஓரங்களையே தங்களின் வாழ்விடமாகக் கொண்டிருந்தனர்.  மக்களின் குடிநீர் தேவை , கால்நடை பராமரிப்பு, உணவு உற்பத்தி , மீன்பிடித்தல் , வணிகம், போக்குவரத்து போன்ற அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் மையமாக ஆற்றங்கரைகள் இருந்ததால் அவைகளை நாம் நாகரிகத்தின் தொட்டில்கள் என்கிறோம்.                       அவ்வாறு ஆற்றங்கரையில் வாழ்ந்த அனைவருமே இயற்கையால் வழங்கப்பட்ட விலைமதிப்பற்ற தண்ணீரை சிக்கனமாகவும், தேவைக்கு தகுந்தாற்போலும் பயன்படுத்தி வந்தனர். மேலும் தாம் வாழ்வதற்கு காரணமான ஆறு மற்றும் ஆற்றங்கரை பகுதிகள் எ...