மணிக்கொல்லை - கல் மணிகள்
கிளியோபாட்ராவின் மேனியை அலங்கரித்த கடலூர் கல் மணிகள் முனைவர் ஜெ.ஆர். சிவராமகிருஷ்ணன் , உதவிப் பேராசிரியர் , வரலாற்றுத்துறை , அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி – ஆத்தூர். ‘’அலைகடல் நடுவுள் பலகலஞ்செலுத்தித் திரைகட லோடித் திரவியம் தேட’’ முனைந்த நம் பண்டைய தமிழர் கிரேக்கம் , ரோமபுரி , சீனம் , எகிப்து , பாலஸ்தீனம் , மொசபடோமியா , பாபிலோனியா, அரேபியா , மலாயா , இந்தோனேசியா , ஜாவா , தாய்லாந்து , இலங்கை போன்ற அயல் நாடுகளுடன் வாணிபத் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு தமது மற்றும் தம் நாட்டின் பொருளாதார நிலையை அந்நிய செலாவணி மூலம் உயர்த்திக் கொண்டு , பிறநாடுகளில் தாம் கற்ற உயர்ந்த பண்பியல் மற்றும் பண்பாட்டுக் கூறுகளை , தம்மை சார்ந்த மக்களுக்கும் கொடுத்து அவர்களையும் பண்பாட்டுரீதியாக உயர்தியமை போற்றத்தக்க ஒன்றாகும் . மேலும் தமிழர்களின் வாணிபம் சிறப்புற்று இருந்தமைக்கு அவர்கள் பின்பற்றிய ‘’ கொள்வதூம் மி...