வாணிகச் சாத்தும் தமிழகத்தின் வணிகப் பெருவழிகளும் நன்றி - தேமொழி பண்டைக்காலத்தில் “ வணிகப் பெருவழிகள் ” பல தமிழக நகர்களை இணைத்ததையும் , குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலையின் “ பாலக்காட்டுக் கணவாய் ” வழியாக மேற்குக் கடற்கரையில் தொடங்கும் வணிகப் பெருவழி ஒன்று இக்கால கோவை , கரூர் , திருச்சி நகர்கள் வழியாக கிழக்குக் கடற்கரையின் பூம்புகார் துறைமுகம் வரை நீண்டிருந்தது என நாம் அறிவோம். ஒரு வணிகப் பெருவழியாக நகர்களை இணைத்து வணிகர்கள் கூட்டம் தங்கள் பொருட்களைக் கொண்டு செல்ல உதவிய இத்தடம் ‘ இராஜகேசரி பெருவழி ’ எனவும் அழைக்கப்பட்டது. பாலக்காட்டுக் கணவாய் வழியாகச் செல்லும் இந்த பண்டைய வணிகப் பெருவழியே இன்றைய “ தேசிய நெடுஞ்சாலை 67 ″ (NH 67- National Highway 67) எனப் பரிணாம வளர்ச்சி கூட அடைந்திருக்க வாய்ப்பிருக்கிறது...