ஹொட்டூர் கல்வெட்டு
வரலாறும் துதி பாடிகளும்
நம்முடைய நாட்டின் வழக்கங்களுள் ஒன்று
துதி பாடுவது.
எவரையேனும் பிடித்துவிட்டால் அவர்தம்
குற்றங்களைக் கூட
மறைத்து போற்ற வேண்டும் என்பது.
இதனால்தான் நம்மவர்கள்
எழுதும் வரலாற்றை மேனாட்டார்
ஒப்புவதில்லை.
காரணம் துதிபாடும்போது நடுவுநிலை
பிறண்டு போகும்.
இதில் பண்டாரத்தாரும் விலக்கல்ல.
ஹொட்டூர் கல்வெட்டு மிகத்தெளிவாக
ராஜராஜநித்ய வினோத ராஜேந்த்ர வித்யாதர
சோளகுலதிலகம்
நூர்மடிசோளம் நவலக்க பலம் பெரஸு பந்து
தோனவுரதோல் பிட்டிள்து
தேசவெல்லாம் சூரெ கொண்டு ஸ்த்ரீவதெ
பாலவதெ ப்ராஹ்மண வதெகளம்
கெய்து பெண்டிரம் பிடிது ஜாதிநாசம்
மாடி சோளன் இரிப்பினம்
என்று தெளிவாக ராஜேந்த்ர சோழன்
பெண்டிரையும், குழந்தைகளையும்
அந்தணர்களையும் கொன்று சூறையாடி
பெண்களையும் சிறையெடுத்துச்
சென்றதைக் கூறுகிறது.
இங்கு கவனிக்க வேண்டியது இது
காப்பியமோ அல்லது தனித்துத் தரப்பெற்ற
செப்பேடோ அல்ல. பலரும் பார்க்கும்
மற்றும் பிற்காலத்தில் சோழராலும்
பார்க்கப்பெற்ற கல்வெட்டு. இதில்
பொய்யுரைகள் வருமா.
ஆனால் பண்டாரத்தார் மட்டும் நம்முடைய
ராஜேந்த்ர சோழன் இவற்றை
யெல்லாம் செய்திருகக மாட்டான் என்பது
ஒருதலை என்கிறார். எதனைப்
பூசி மெழுக முற்படுகிறார். ஒரு
வரலாற்று ஆய்வாளனின் பணி இருப்பதை
அங்கை நெல்லிக்கனியென தெளிவாகத்
தருதலே. நமக்குப் பிடித்தவர் என்பதால்
பூசி மெழுகுதலல்ல. இதன் பொருள்
சாளுக்யர் பொய் கூறினர் என்றா.. இதுதானா வரலாற்று ஆய்வு. இது துதிபாடுவதல்லவா.
இந்தத் துதிபாடும் வழக்கத்தை விடுத்து
எப்போது நம்மவர்கள் வெளிவரு
வார்களோ அப்போதுதான் வரலாறு உள்ளது
உள்ளபடி கிடைக்கும்.
Comments
Post a Comment