சோழ அரியணையில் பெண்
அரசன் இல்லாதபோது மகனில்லையேல்
கர்ப்பிணியான மனைவியை யாவது அமர்விக்கலாம் என்பது தர்மசாஸ்த்ரம். ஸூர்யவம்சத்தில்
இராமபிரானுக்குப் பிறகு 32 தலைமுறைகளுக்கு அக்னிவர்ணன் இறக்க கர்ப்பிணியான அவன் மனைவி
அரசாண்டதாக விஷ்ணு புராணம் முதலிய புராணங்கள். கூறுகின்றன.
கரிகாற்பெருவளத்தான் பாண்டிய நாட்டின்
மீது படையெடுத்ஊபோது கர்ப்பிணியான தன் மனைவியை அரியணையில் அமரவைத்து விட்டு
சென்றதாக புதிதாகக் கிடைத்த திருவிந்தளூர் செப்பேடு கூறுகிறது.
யாஸ்யன் பாண்ட்³யான் ஸ விதா³ம் ராஜ்ஞீம்
ஸ்வாமபி⁴ஷேசயத்
என்பது 10 ஆவது செய்யுள்.
கரிகாலன் மீளும் வரை அரசியே கோலோச்சினாள் என்பது அறியற்பாலது.
Comments
Post a Comment