ராஜாதிராஜனைக் கொன்றவன்

 

                  ராஜாதிராஜனைக் கொன்றவன்

 


கொப்பத்துப் போரில் முதலாம் ராஜாதிராஜன் இறந்துபட்டான். ஆனால் அவனைக் கொன்றவனைப் பற்றிய தகவல்களைத் தமிழக வரலாற்று ஆசிரியர்கள் தருவதில்லை. அவன் பெயர் மஹாமண்டலேச்வரன் பெர்மாள மாரராஜன் என்பதாகும். அவன் ஆஹவமல்ல ஸோமேச்வரனின் படைத்தலைவர்களுள் ஒருவன்.  தமிழகத்தில் பாண்டியன் தலைகொண்ட என்று குறிப்பதைப்போலவே அவனுக்கு ராஜாதிராஜ சோளங்கொண்ட என்ற விருதுப்பெயர் வழங்கப்பட்டது. அவன் அதே விருதோடு சோளங்கொண்ட த்ரைபுருஷ தேவர் என்ற பெயரில் அன்னிகேரியில் ஒரு ஆலயம் எடுப்பில் தான்.

இதைப்போலவே 1047-இல் ஆஹவமல்லன் சோழர் தளபதிகளில் ஒருவனைக் கைது செய்தான். இதனால்தான் சோழ சாளுக்ய போரில் ராஜாதிராஜன் சாளுக்யர் மாளிகையைத் தகர்ப்பித்தான். இதையும் தமிழக வரலாற்று ஆசிரியர்கள் தருவதில்லை.

Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

கல்வெட்டில் குற்றம், தண்டனை, தீர்வு