எறிபுனற் கங்கை
எறிபுனற் கங்கை
சோழப்பேரரசன் ராஜேந்திரனின்
மெய்கீர்த்திகளில் வரும் ஒரு சிறிய சொல் "எறி புனற் கங்கை" அதன்
முக்கியத்துவத்தை காண்போம்
புவியின் மேலோட்டில் உள்ள
நிலத்தடிநீர் சில குறிப்பிட்ட இடங்களில் மட்டும் காணப்படும் புவிவெப்பத்தின்
காரணமாகச் சூடேற்றப்பட்டு சுடுநீராக ஊற்றெடுக்கும்போது அந்த இடம்
"வெந்நீரூற்று" என அழைக்கப்படுகின்றது. இந்த வெந்நீரூற்றுக்கள் வெவ்வேறு
அளவான ஓட்டங்களைக் கொண்டிருக்கும். சில மிக மெதுவான ஓட்டத்தைக் கொண்ட
ஊற்றுக்களாகவும், சில ஆறு போன்ற ஓட்டங்களைக் கொண்டனவாகவும் இருக்கும். சில
வெந்நீரூற்றுக்களில் ஏற்படும் அமுக்கமானது பீறிடும் வெந்நீரூற்றுக்களை உருவாக்கக்
கூடியளவு அதிகமாக இருக்கும்.
உத்தர காசியிலிருந்து கங்கோத்ரி செல்லும் பாதையில் கங்கா நானியில்
ரிஷி குண்ட் என்று அழைக்கப்படும் இடத்தில் வெந்நீர் ஊற்றுகள் உள்ளது.
இங்கே இயல்பாகவே நீர் கொதித்து
கொண்டிருக்கும். கங்கைவரை படையெடுத்து சென்ற ராஜேந்திரனின் தானைத்தலைவன்
"அரையன் ராஜராஜன்" தலைமையிலான படை கங்கைகரை மன்னனை வென்று, அங்குள்ள கங்கைநீரை
கொண்டு வந்தது. கங்கைகொண்டசோழபுரத்தில் உள்ள ஏரியில் அப்புனிதநீரை கலந்து
"சோழகங்கம்" என பெயரிட்டார் ராஜேந்திரர். சோழப்படை கங்கைவரை சென்று தான்
வெற்றி பெற்ற நாடுகளில் நிலவியலையும் சேர்த்து பதிவுசெய்தது. அதில் ஒன்றுதான் இந்த
"எறிபுனற் கங்கை"
கருத்து பரிமாற்றம்: King Raja
Comments
Post a Comment