விபத்தில் ஒருவர் உயிரிழந்தால்

 

                     விபத்தில் ஒருவர் உயிரிழந்தால்



   இன்றைய அரசாங்க  ஒரு லட்சம் அல்லது இரண்டு லட்சங்கள் கொடுக் கும். தற்போதைய காலகட்டத்தில் அந்த பணம் எத்தனை நாட்களுக்கு வரும், அதற்கு பின்னர் அந்த குடும்பம் பிழைக்க என்ன செய்யும் என்பது பற்றி எல்லாம் கவலை ஏதும் இல்லை.ஆனால் இதே மண்ணை ஆயிரம் வருடங்களுக்கு முன் ஆண்ட மன்னர்கள் என்ன வெல்லாம் செய்திருகிறார் கள் என்பதை பாருங்கள்.

கல்வெட்டு

  "கோயில் திருப்பணி செய்கிற ஆலால சுந்தர ஆசாரி முன்பே மண்ட பத் துக்கு கல் ஏற்றுகையில் திருமுனபெயர்க்கல் விழுந்து சாகையில் இவன் மகன் ஆளவந்தானுக்கு ஆலால சுந்தர ஆசாரியின் வபெரும குடுத்து இவன் தமையன் மருதாணுடைக்கு நாவிலங்காத ஆசாரி என வபெருமகுடுத்து  நெனனுர்திருகாமத்துக் காணியிலே இவர்களுக்கு காணியாக விட வடக்குத் தெருவில் குளந்தை மனைக்கு கிழகுக்கு மான மனைக்கு மேற்கு உட்பட்ட மனையும் மனையடப்பை யும் வட கழனியில் ஏழு குட்டத்த மயில் ஆத்திவடம் உட்பட்ட நிலத் திலிருந்து இருநூறு குழியும் புன்செயிலிருந்து இருநூறு குழியும் முத லடங்க இறையிலி ஆக இன்று முதல் சந்திர சூரியர்த்த வரையும் செல்வதாக குடுத்தோம்."

செய்தி

"கோயில் திருப்பணி செய்துகொண்டிருந்த போது மேல் ஏறிக்கொண் டிருந்த கல்லானது அவர் மேல் விழுந்து இறந்துவிடுகிறார், அதனால் அவர் மகன் ஆளவந்தானுக்கும் அவரின் தமையன் (அண்ணன்) மரு தாணிக்கும் பிற் காலத்தில் குழப்பங்கள் ஏதும் வந்துவிடக்கூடாது என்பதற்காக இந்த தெரு வில், இன்னாரின்  நிலத்தில், இந்த திசையில் வீட்டு மனைகளும், இருநூறு குழி நன்செய் நிலங்களும், இருநூறு குழி புன்செய் நிலங்களும், சந்திர சூரியன் உள்ள வரை அந்த பரம்பரைக்கு 'இறையிலி ஆக" அதாவது வரி நீக்கப்பட்டு அந்த நிலங்கலாவது கொடையளிக்கபடுகிறது!.

 

     விவசாயம் மூலமாக மட்டுமே வரிவசூலான அந்த காலகட்டத்தில் சாதாரண கட்டிடம் கட்டும்  தொழிலாளி ஒருவன் இறந்து விடுகிறான் என்பதற்காக ஒரு அரசாங்கம் அந்த குடும்பம் சந்திர சூரியன் உள்ள வரை வரி ஏதும் கட்டாமல் அந்த நிலங்களை அனுபவிக்கலாம் என்று கூறி இருப்பது, இந்த தமிழினத்தில், எப்படிப்பட்ட மனிதர்கள், எப்படிப் பட்ட மன்னர்கள் நம் மண்ணில் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை எவ்வளவு அழகாக காட்டுகிறது.

 

Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

கல்வெட்டில் குற்றம், தண்டனை, தீர்வு