வேதம் கற்க பறையர் அளித்த கொடை

 

                 வேதம் கற்க பறையர் அளித்த கொடை




 

அம்பாஸமுத்ரத்தில் திருமூலநாதர் கோயிலிலுள்ள கல்வெட்டு ஒன்று சடை யன் மாறனின் 11 ஆட்சியாண்டைச் சேர்ந்தது. இந்தக் கல்வெட்டு, பூவன் பறையன் என்பவர் இளங்கோய்குடி அதாவது அம்பாஸமுத்ரம் அந்தணர் ஸபையிடமிருந்து பாழ் நிலத்தை விலைகொடுத்து வாங்கி அதனை வசக்கி அதாவது திருத்தி வயலும் குளமுமாக ஆக்கி பறையன் வசக்கல் என்ற பெயரோடு கிடைப்புறமாக அதாவது மாணவர்கள் வேதம் கற்க மூலதனமாக தானமாக வழங்கிய செய்தியைத் தருகிறது. இதன் காலம் 10-11 ஆம் நூற்றாண்டு.  வேதாத்யயனத்திற்கு அந்நாளில் பறையர் குலத்தவர் அளித்த பங்கீடு இதனால் அறியக் கிடைக்கிறது.

 

Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

கல்வெட்டில் குற்றம், தண்டனை, தீர்வு