வடசென்னிமலை முருகன்

வடசென்னிமலை முருகன் சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம் காட்டுக்கோட்டை அருகே வடசென்னி மலை முருகன் கோயில் அமைந்துள்ளது. குன்று அமைந்துள்ள இடங்கள் எல்லாம் குமரன் குடியிருக்கும் இடம். அந்தவகையில் வட சென்னி மலை யும் இயற்கையாக அமைந்த மலையாகும். இம் மலை மீது அமைந்துள்ள கோயிலில் முருகன் குழந்தை பருவத்துடனும் , திருமணக் கோலத்திலும் , முதிர்ந்த பருவ தண்டாயுதபாணியாகவும் மக்களுக்கு காட்சித் தருகிறார். கோயில் வரலாறு சுமார் 300 ஆண்டுகால பழமையான இக்கோயிலில் சுயம்பு வடிவமாக முருகன் வள்ளி , தெய்வானையுடன் பக்கதர்களுக்கு காட்சியளித்தார். பிறகு வடகுமரை என்ற ஊரை சார்ந்த அப்பன்ன சுவாமிகள் வைணவ சமயத்தின் மீது அதிகம் பற்றுள்ளவர். இருப்பினும் வடசென்னிமலை சுயம்புவாக உள்ள முருகனிடத்தில் அதீத பக்தி கொண்டவர். இதனால் முருகனின் குழந்தை வடிவ சிலை ஒன்றை செய்வதற்காக காஞ்சிக்கு சென்று மாகாப்பெரியவரை நேரில் சந்தித்து. வடசென்னிமலை முருகன் கோயிலுக்கு குழந்தை வடிவ சிலையை எந்த சிற்பியிடம் செய்தால் சிலை நன்றாக இருக்கும் என்று கேட்டார். அதற்கு மகாப்பெரியவர் ...