Posts

Showing posts from April, 2023

பொற்கைப் பாண்டியர் பற்றிய கல்வெட்டு

Image
 லாவோஸ் நாட்டில் பொற்கைப் பாண்டியர் பற்றிய கல்வெட்டு!!! கனக பாண்டிய மன்னன், (அதாவது தங்கக் கரம் கொண்ட பாண்டியன்) யுதிஷ்டிரனைப் போலவே நீதியுள்ளவன்;  பகீரதன் தன் குடிமக்களைப் பாதுகாப்பதில்,  அர்ஜுனன் (விஜயா) எதிரிகளை வெல்வதில்,  இந்திரத்யும்னன் யாகம் செய்கிறான்; அன்பான சிபியாக (ஸ்ரீ ராமரின் மூதாதையர்) அனைவரையும் பாதுகாப்பவர்; விஷ்ணுவாக வேத தர்மத்தைப் பின்பற்றுபவர்; கனகபாண்டியராக நீதி வழங்குபவர்; இமயமலை போல் நிலையானவர், பெருங்கடல் போல் கம்பீரமானவர். என்று செல்கிறது கல்வெட்டு. இதில் நமக்குத் தேவையான குறிப்பு, நீதியை என்னும் பொருள்படும்படி நிலைநாட்டுவதில் கனகபாண்டியன் அதாவது  பொற்கைப்பாண்டியன் குறிப்புத்தான். பொற்பாண்டியன் கனகபாண்டியன் என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது. எங்கோ கிழக்குமூலையிலுள்ள ஒரு நாட்டில் ஆறாம் நூற்றாண்டிலமைந்த வடமொழிக் கல்வெட்டு பாண்டிய மன்னனைப் புராணகால புருஷர்களைப் போல பெருமையாக  குறிப்பிடுகிறது.... பாண்டியர் பெருமையை   உலகெங்கும் ....

ஜீவிதப்பற்று இறைவனுக்காக

Image
  ஜீவிதப்பற்று இறைவனுக்காக திருநெல்வேலியிலுள்ள நெல்லையப்பர் கோயிலில் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் 20-ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு ஒன்று அமைந்துள்ளது. இந்தக் கல்வெட்டு அரசன் திருநெல்வேலி அரண்மனயில் இருந்தபோது காலடிச் சங்கரன் அழகிய பெருமாளான மழவராயன் என்பவன் தனது அப்பாட்டருக்கு அதாவது முப்பாட்டனுக்கும் தனக்கும் வழங்கப்பெற்ற ஜீவிதத்தைத் தான் எடுப்பித்த சொக்கருக்கு வேண்டும் நிவந்தங்களுக்காகக் கொடுத்த செய்தியைத் தருகிறது. ஜீவிதம் என்பது அரசு அலுவலர்கள் ஓய்வு பெறும்போது அவர்கள் வாழ அனுபவ உரிமையோடு தரப்படும்நிலமாகும். அதனை இறைவனுக்குக் கொடுத்தான் மழவராயன். முப்பாட்டனை அப்பாட்டர் என்று கல்வெட்டு குறிப்பிடுவது நோக்கற்பாலது. காலடிச் சங்கரன் என்னும் பெயரால் சில குழப்பங்கள் நிலவியது.

வெண்கொற்றக் குடை

Image
  அரசர்கள் சூடும் வெண்கொற்றக் குடையைப் பற்றிய விளக்கம் போஜன் எழுதிய யுக்திகல்பதருவில் இருக்கிறது. தண்டம், மேலே குமிழ், கம்பிகள், கயிறு, துணி, பூட்டும் தாழ் ஆகிய ஆறு அங்கங்கள் குடைக்கு உண்டு. தண்டம், பத்து, எட்டு, ஆறு அல்லது நான்கு ஹஸ்தங்கள் நீளத்தில் அமையலாம். ஆறு, ஐந்து, நான்கு அல்லது இரண்டு சாண் அளவில் குமிழை அமைக்கலாம். நூறு, எண்பது, அறுபது அல்லது நாற்பது கம்பிகளை அமைக்கலாம். கம்பிகளின் நீளம் ஆறு, ஐந்து அல்லது நான்கு முழங்கள். கம்பிகளைப் போல இரண்டு மடங்கு அகலத்தில் துணி, பதினொன்று, பத்து, ஒன்பது அல்லது எட்டங்குலத்தில் தாழை அமைக்கலாம். தண்டத்தை மூங்கிலாலோ சந்தனத்தாலோ அல்லது தங்கத்தாலோ அமைக்கலாம். இதில் கால்பங்கு குறைந்தது இளவரசனுக்கு. மேலே குமிழில் நவரத்னங்களை அமைக்கலாம். முப்பத்தியிரண்டு முத்துக்களைக் கொண்ட முப்பத்தியிரண்டு மாலைகளைத் தொங்கவிடலாம். இதற்கு திக்விஜயம் என்று பெயர்..

லாடப்பேரரையர் லாடமாதேவி

Image
  லாடப்பேரரையர் லாடமாதேவி குஜராத் மாநிலத்தின் பண்டைய பெயர்களில் ஒன்று லாடதேசம். வடமொழியில் சொல்லணிகளில் ஒன்று லாடானுப்ராஸம் என்று வழங்கப்படுகிறது. அவ்வகை விளாப்பாக்கம் முதலிய கல்வெட்டுக்களில் காணப்பெறும் லாடப்பேரரையர் மற்றும் லாடமாதேவி முதலியோர் லாடமான குஜராத் மாநிலத்திலிருந்து தமிழகம் வந்த சிற்றரசர்கள் ஆகலாம் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். ஆயின் ராஜேந்ந்த்ரன் வென்ற தக்ஷிணலாடமும் உத்தர லாடமும் பலரால் கிழக்கில் அடையாளம் காணப்பெறுகிறது. ஆயினும் லாடப்பேரரையர் குஜராத்திலிருந்து வந்தவர்களோ அல்லது அதனோடு தொடர்புடையவர்களோ ஆகலாம்

மரங்களை வெட்டினால்

Image
  மரங்களை வெட்டினால் ஊருக்குப் பொதுவான மரங்களை வெட்டினால் தண்டனை உண்டு. இன்றும் இது பின்பற்றப்பட்டாலும் பெரிதும் எவரும் சட்டை செய்வதில்லை. 1202-ஐச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று கீரனூரைச் சேர்ந்தது. இந்தக் கல்வெட்டு கிணற்றை அழித்தால் மா அளவு நிலமும் மரங்களை வெட்டினால் காணி அளவு நிலமும் தண்டனையாகப் பெறப்படும் என்று தெரிவிக்கிறது. அர்த்தசாஸ்திரத்தில் பொன்னாக தண்டனை இருக்க இங்கே நிலமாக வசூலிக்கப்பட்டிருக்கிறது.

குஜராத் மாநிலம்

Image
  குச்சர குடிகை மணிமேகலை இரண்டு இடங்களில் குச்சர குடிகை என்னும் சொல்லாட்சியைக் கொண்டுள்ளது. இதற்கு பொருள் கூறிய அறிஞர்கள் குச்சரம் அதாவது கூர்ஜர நாட்டு பாணியில் கட்டப்பெற்ற குடிகை அதாவது கோயில் என்று பொருள் கூறியுள்ளனர். மணிமேகலை குச்சர குடிகையில் புகுந்து காயசண்டிகையின் வடிவெடுத்தாள் என்று காப்பியம் குறிப்பிடுகிறது.  ஆக ஐந்தாம் நூற்றாண்டில் குஜராத் மாநிலப் பாணியில் தமிழகத்தில் கோயில் இருந்தமை பெறப்படுகிறது. பாடபேதங்கள் இருந்தாலும் அறிஞர்கள் பெரும்பாலும் தெரிவு செய்த பாடம் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.

பகவத்பாத பாஷ்யத்தில் நகரங்கள்

Image
  பகவத்பாத பாஷ்யத்தில் நகரங்கள் பகவத்பாதர்களின் ப்ரஹ்மஸூத்ர பாஷ்யத்தில் இரு நகரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.  ந ஹி தே³வத³த்த꞉ ஸ்ருக்⁴னே ஸம்ʼநிதீ⁴யமானஸ்தத³ஹரேவ பாடலிபுத்ரே ஸம்ʼநிதீ⁴யதே யுக³பத³னேகத்ர வ்ருʼத்தாவனேகத்வ- ப்ரஸங்கா³த் ஏதோ நகரங்களின் பெயரை எடுத்துக்காட்டாக கூறவேண்டுமானால் இன்று எழுதுபவர் டில்லி, மும்பை கல்கத்தா என்று எடுத்துக்காட்டாக எழுதுவார். பொலிவிழந்து நகரங்களையல்ல. அப்படி பகவத்பாதர்கள் எடுத்துக்காட்டாக கூறுவது இரண்டு நகரங்கள். ஒன்று ஸ்ருக்னம். இரண்டாவது பாடலிபுத்ரம். இவற்றுள் ஸ்ருக்னம் ஹர்யாணாவில் பழைய யமுனைக்கரையில் அமைந்துள்ள ஸுக் என்னும் ஊராகும். பாணினி குறிப்பிடும் இந்த நகரம் நான்காம் நூற்றாண்டில் அழிந்துபட்டது. ஏழாம் நூற்றாண்டில் சீன யாத்ரிகரான யுவான் ஸாங் இதனை இடிபாடுகள் எஞ்சிய நகரம் என்று குறிப்பிடுகிறார். பாடலிபுத்ரம் பொது 750 இல் நிகழ்ந்த பெரு வெள்ளத்தில் பொலிவிழந்து போயிற்று.  பகவத்பாதர்கள் 788-இல் தோன்றி பாஷ்யம் இயற்றியிருந்தால் பொலிவிழந்த நகரங்களையும் எடுத்துக்காட்டாக கூறுவார்? பாடலிபுத்ரமாவது சில ஆண்டுகள் வரை இலக்கியப் புகழ் கொண்டது. ஸ்ருக்னம் அறவ...

ராகங்கள் முப்பத்திரண்டு

Image
                                                               ராகங்கள் முப்பத்திரண்டு கர்ணாடக மாநிலம் தார்வாட் மாவட்டத்திலுள்ள கலகநாத்தில் கலகேச்வரர் கோயிலிலுள்ள கல்வெட்டு ஒன்று 1070 மார்ச் 20-ஐச் சேர்ந்தது. இந்தக் கல்வெட்டு பர்ம்மையா என்பவன் ஆடல் பாடல் முதலிய கலைகளில் வல்லவன் என்றும் முப்பத்திரண்டு ராகங்களை இசைப்பதில் நான்முகன் என்றும் புகழப்பெற்றுள்ளான். இன்று மேளகர்த்தா ராகங்கள் என்று எழுபத்தியிரண்டு இருந்தாலும் நாற்பது கலப்புடையது என்று கருதுவர். ஆக எஞ்சிய ராகங்களுக்கும் கல்வெட்டு கூறும் ராகங்களுக்கும் தொடர்பிருந்தால் இந்த முப்பத்திரண்டு ராகங்களே அவை என்று கொள்ள முடியும். ஏழாம் நூற்றாண்டு வரை க்ராமங்களே கல்வெட்டில் கிடைக்க 11 ஆம் நூற்றாண்டில் 32 ராகங்கள் என்ற குறிப்பு இசைத்துறைக்கு முக்கியமானது.

நிலவியல் நோக்கில் கங்கைகொண்ட சோழபுரம் வரலாறு

Image