குஜராத் மாநிலம்
குச்சர குடிகை
மணிமேகலை இரண்டு இடங்களில் குச்சர குடிகை என்னும் சொல்லாட்சியைக் கொண்டுள்ளது. இதற்கு பொருள் கூறிய அறிஞர்கள் குச்சரம் அதாவது கூர்ஜர நாட்டு பாணியில் கட்டப்பெற்ற குடிகை அதாவது கோயில் என்று பொருள் கூறியுள்ளனர். மணிமேகலை குச்சர குடிகையில் புகுந்து காயசண்டிகையின் வடிவெடுத்தாள் என்று காப்பியம் குறிப்பிடுகிறது.
ஆக ஐந்தாம் நூற்றாண்டில் குஜராத் மாநிலப் பாணியில் தமிழகத்தில் கோயில் இருந்தமை பெறப்படுகிறது. பாடபேதங்கள் இருந்தாலும் அறிஞர்கள் பெரும்பாலும் தெரிவு செய்த பாடம் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment