வெண்கொற்றக் குடை

 



அரசர்கள் சூடும் வெண்கொற்றக் குடையைப் பற்றிய விளக்கம் போஜன் எழுதிய யுக்திகல்பதருவில் இருக்கிறது. தண்டம், மேலே குமிழ், கம்பிகள், கயிறு, துணி, பூட்டும் தாழ் ஆகிய ஆறு அங்கங்கள் குடைக்கு உண்டு. தண்டம், பத்து, எட்டு, ஆறு அல்லது நான்கு ஹஸ்தங்கள் நீளத்தில் அமையலாம். ஆறு, ஐந்து, நான்கு அல்லது இரண்டு சாண் அளவில் குமிழை அமைக்கலாம். நூறு, எண்பது, அறுபது அல்லது நாற்பது கம்பிகளை அமைக்கலாம். கம்பிகளின் நீளம் ஆறு, ஐந்து அல்லது நான்கு முழங்கள். கம்பிகளைப் போல இரண்டு மடங்கு அகலத்தில் துணி, பதினொன்று, பத்து, ஒன்பது அல்லது எட்டங்குலத்தில் தாழை அமைக்கலாம். தண்டத்தை மூங்கிலாலோ சந்தனத்தாலோ அல்லது தங்கத்தாலோ அமைக்கலாம். இதில் கால்பங்கு குறைந்தது இளவரசனுக்கு. மேலே குமிழில் நவரத்னங்களை அமைக்கலாம். முப்பத்தியிரண்டு முத்துக்களைக் கொண்ட முப்பத்தியிரண்டு மாலைகளைத் தொங்கவிடலாம். இதற்கு திக்விஜயம் என்று பெயர்..

Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

கல்வெட்டில் குற்றம், தண்டனை, தீர்வு