ராகங்கள் முப்பத்திரண்டு

                                                              ராகங்கள் முப்பத்திரண்டு




கர்ணாடக மாநிலம் தார்வாட் மாவட்டத்திலுள்ள கலகநாத்தில் கலகேச்வரர் கோயிலிலுள்ள கல்வெட்டு ஒன்று 1070 மார்ச் 20-ஐச் சேர்ந்தது. இந்தக் கல்வெட்டு பர்ம்மையா என்பவன் ஆடல் பாடல் முதலிய கலைகளில் வல்லவன் என்றும் முப்பத்திரண்டு ராகங்களை இசைப்பதில் நான்முகன் என்றும் புகழப்பெற்றுள்ளான். இன்று மேளகர்த்தா ராகங்கள் என்று எழுபத்தியிரண்டு இருந்தாலும் நாற்பது கலப்புடையது என்று கருதுவர். ஆக எஞ்சிய ராகங்களுக்கும் கல்வெட்டு கூறும் ராகங்களுக்கும் தொடர்பிருந்தால் இந்த முப்பத்திரண்டு ராகங்களே அவை என்று கொள்ள முடியும். ஏழாம் நூற்றாண்டு வரை க்ராமங்களே கல்வெட்டில் கிடைக்க 11 ஆம் நூற்றாண்டில் 32 ராகங்கள் என்ற குறிப்பு இசைத்துறைக்கு முக்கியமானது.

Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

கல்வெட்டில் குற்றம், தண்டனை, தீர்வு