ஜீவிதப்பற்று இறைவனுக்காக
ஜீவிதப்பற்று இறைவனுக்காக
திருநெல்வேலியிலுள்ள நெல்லையப்பர் கோயிலில் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் 20-ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு ஒன்று அமைந்துள்ளது. இந்தக் கல்வெட்டு அரசன் திருநெல்வேலி அரண்மனயில் இருந்தபோது காலடிச் சங்கரன் அழகிய பெருமாளான மழவராயன் என்பவன் தனது அப்பாட்டருக்கு அதாவது முப்பாட்டனுக்கும் தனக்கும் வழங்கப்பெற்ற ஜீவிதத்தைத் தான் எடுப்பித்த சொக்கருக்கு வேண்டும் நிவந்தங்களுக்காகக் கொடுத்த செய்தியைத் தருகிறது. ஜீவிதம் என்பது அரசு அலுவலர்கள் ஓய்வு பெறும்போது அவர்கள் வாழ அனுபவ உரிமையோடு தரப்படும்நிலமாகும். அதனை இறைவனுக்குக் கொடுத்தான் மழவராயன். முப்பாட்டனை அப்பாட்டர் என்று கல்வெட்டு குறிப்பிடுவது நோக்கற்பாலது. காலடிச் சங்கரன் என்னும் பெயரால் சில குழப்பங்கள் நிலவியது.
Comments
Post a Comment