பகவத்பாத பாஷ்யத்தில் நகரங்கள்
பகவத்பாத பாஷ்யத்தில் நகரங்கள்
பகவத்பாதர்களின் ப்ரஹ்மஸூத்ர பாஷ்யத்தில் இரு நகரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
ந ஹி தே³வத³த்த꞉ ஸ்ருக்⁴னே ஸம்ʼநிதீ⁴யமானஸ்தத³ஹரேவ பாடலிபுத்ரே ஸம்ʼநிதீ⁴யதே யுக³பத³னேகத்ர வ்ருʼத்தாவனேகத்வ- ப்ரஸங்கா³த்
ஏதோ நகரங்களின் பெயரை எடுத்துக்காட்டாக கூறவேண்டுமானால் இன்று எழுதுபவர் டில்லி, மும்பை கல்கத்தா என்று எடுத்துக்காட்டாக எழுதுவார். பொலிவிழந்து நகரங்களையல்ல. அப்படி பகவத்பாதர்கள் எடுத்துக்காட்டாக கூறுவது இரண்டு நகரங்கள். ஒன்று ஸ்ருக்னம். இரண்டாவது பாடலிபுத்ரம். இவற்றுள் ஸ்ருக்னம் ஹர்யாணாவில் பழைய யமுனைக்கரையில் அமைந்துள்ள ஸுக் என்னும் ஊராகும். பாணினி குறிப்பிடும் இந்த நகரம் நான்காம் நூற்றாண்டில் அழிந்துபட்டது. ஏழாம் நூற்றாண்டில் சீன யாத்ரிகரான யுவான் ஸாங் இதனை இடிபாடுகள் எஞ்சிய நகரம் என்று குறிப்பிடுகிறார். பாடலிபுத்ரம் பொது 750 இல் நிகழ்ந்த பெரு வெள்ளத்தில் பொலிவிழந்து போயிற்று.
பகவத்பாதர்கள் 788-இல் தோன்றி பாஷ்யம் இயற்றியிருந்தால் பொலிவிழந்த நகரங்களையும் எடுத்துக்காட்டாக கூறுவார்? பாடலிபுத்ரமாவது சில ஆண்டுகள் வரை இலக்கியப் புகழ் கொண்டது. ஸ்ருக்னம் அறவே அற்றுப் போயிற்று.
Comments
Post a Comment