பெருமாள் தடாகம்
தமிழ்நாடு காத்த பெருமாள் தடாகம் தமிழ் கூறும் நல்லுலகம் நீண்டகாலமாகவே தமிழ்நாடு என்று அழைக்கப்பட்டு வருகிறது. ' வண்தமிழ் நாட்டு எல்லை பிற்பட நெறியின் ஏகி' ' பானல் வயல் தமிழ்நாடு' ' பூழியர் வண்தமிழ் நாட்டுத் தளர்செய்' என்ற பாடல் வரிகளால் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே சேக்கிழார் பெருமான் தமிழ் மண்ணை தமிழ்நாடு என்று குறித்துள்ளார். இதைப்போலவே பல்லவ குல பாரிஜாதம் என்று போற்றப்பட்டவனும் மூன்றாம் ராஜராஜ சோழனின் மைத்துனனுமாகிய காடவராயன் கோப்பெருஞ்சிங்கனும் தமிழ்நாடு என்ற பெயரை பயன்படுத்தியுள்ளான். இவன், விழுப்புரம் மாவட்டம் சேந்தமங்கலத்தை தலைநகராக கொண்டு ஆட்சி செய்தவன். "தூய தமிழ்நாடு காத்த பெருமான்”, “நாயனார் அழகிய சியரான தமிழ்நாடு காத்தான் பல்லவராயர்”, “பேணுசெந்தமிழ் வாழப்பிறந்த காடவ கோப்பெருஞ்சிங்கன்” என பலவாறு புகழப்பட்டிருக்கிறான் இந்த மாமன்னன். கி.பி. 13 ஆம் நூற்றாண்டிலேயே “தமிழ் நாட்டை காப்பாற்றியவன்” என்றும் “ஒரு தாய் தன்னுடைய குழந்தையை பேணுவதைப் போல செந்தமிழை வாழவைக்க பிறந்தவன்” என்றும் சோழர்கள் காலக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டவன் “காடவன் கோப்பெருஞ்சிங்க...