சேதுபதி கால நன்னியூர் கல்வெட்டு

 


நீர்நிலைகள் பராமரிப்புக்கு கூலி இல்லாமல் செய்யும் 'ஆளமஞ்சி' எனும் கட்டாய வேலை தலைமுறை தலைமுறையாகத் தொடர வலியுறுத்தும் கல்வெட்டு சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம், வாடி நன்னியூர் கண்மாய் அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நீர்நிலைகள் பராமரிப்புக்கு கூலி இல்லாமல் செய்யும் கட்டாய வேலை ஆளமஞ்சி எனப்படுகிறது. இந்த இரண்டும் சந்திரன், சூரியன் உள்ள வரை தொடர்ந்து நடைபெற வேண்டும் என சந்திரப் பிரவேசமாகக் கட்டளையிடப்பட் டுள்ளது. இதில் ஒருசேர இணைத்து என்பதற்கு 'அன்றில்' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. தலைமுறை தலைமுறையாக என்ற பொருளில் சந்ததிப் பிரவேசம் என்பதை சந்திரப் பிரவேசம் எனக் குறிப்பிட்டுள்ளனர். 

கல்வெட்டின் எழுத்தமைதி கொண்டு இது கி.பி. 18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனலாம். கல்வெட்டில் மன்னர் பெயர் இல்லை என்றாலும், இதன் அமைப்பைக் கொண்டு 
இது சேதுபதி மன்னர்கள் அல்லது அவர்கள் அரசப் பிரதி நிதிகளின் கல்வெட்டு எனக் கருதலாம். தற்போது இவ்வூர் வாடி நன்னியூர் என அழைக்கப்பட்டாலும் கல்வெட்டில் நன்னியூர் வாடி எனக் குறிப்பிடப்படுகிறது. முல்லை நிலத்து ஊர் என்ற பொருளில் பாடி என அழைக்கப்பட்டு அது வாடி எனத் திரிந்துள்ளது.வாடி என்பதற்கு சாவடி என்ற பொருளில் காவல் அலுவலகமாகவும் இவ்வூர்விளங்கியிருக்கலாம். நன்னியூர் என்பதற்கு சிறிய ஊர் என்பது பொருள்.

இதில் நிலத்துக்கு விதிக்கப்படும் புரவரியை பிறவரி எனச் சொல்லியிருக்கிறது. 

Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

கல்வெட்டில் குற்றம், தண்டனை, தீர்வு