மணிமங்கலம் கல்வெட்டு
" மணிமங்கலம் கல்வெட்டு "
வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தக் கல்வெட்டு.
இரண்டாம் இராஜேந்திரரின் கல்வெட்டு.
S.i.i vol 3 no 29..
செங்கல்பட்டு அருகே மணிமங்கலம் இராஜகோபாலசுவாமி கோவிலில் உள்ள சாசனம்.
இரண்டாம் இராஜேந்திரனுக்கு சகோதரர்கள் எத்தனை.?
மகன்கள் யார்..? பேரன்கள் உண்டா..?
சிற்றப்பன் ஒருவர் இருக்கிறாரே..
கொப்பம் போரில் என்ன நடந்தது..?
அனைத்து விபரங்களும் இக்கல்வெட்டில் காணப்படுகிறது.
______________________________ ____________________
முதலாம் இராஜேந்திரரின் மூத்த மகன் இராசாதிராசன்.
இராசாதிராசன் சோழ அரசனாய் இருந்து போர்களத்தில்
இறந்தப் பிறகு, இராசாதிராசனின் சகோதரனான
இரண்டாம் இராஜேந்திரன் அரசனாகிறார்..
இராண்டாம் இராஜேந்திரனின் நான்காம் ஆட்சியாண்டு
கல்வெட்டு இது.. மணிமங்கலம் என்னும் ஊரில் உள்ளது.. இவரது உறவினர்களுக்கு வழங்கப்பட்ட
பதவிகளைக் குறிக்கிறது..
முதல்வரியை நோக்கினால்..
தனது சிறியதாதையாகிய எறிவலி என்பவரை
குறிப்பிடுகிறது..சிறிய தாதை என்றால் சித்தப்பா..
அதாவது 2 ம் இராஜேந்திரனின் சித்தப்பா.. அதாவது
முதலாம் இராஜேந்திரரின் சகோதரன். அதாவது
( முதலாம் இராஜராஜரின் மற்றோர் மகனாக இருக்கலாமோ.?)
இந்த எறிவலியை கங்கை கொண்ட சோழன் எனவும்,
இருமுடிசோழன் எனவும் இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது..
அடுத்த வரியில்.. இவரது சகோதரர் மும்முடிசோழன்
என்பவர் வருகிறார். இவர் சோழபாண்டியன் எனவும்
அழைக்கப்படுகிறார்.. இவர்தான் மதுரையை ஆட்சி
செய்திருக்க வேண்டும்.
அடுத்த வரியில் இவரது சகோதரர் வீரசோழன்
என்பவர் வருகிறார்.. இவர் கரிகாலன் என்னும் பெயர்
உடையவர்.. இவர்தான் பின்னாளில் வீரராஜேந்திரன்
என்னும் பட்டத்துடன் பதவிக்கு வந்தவர்..
அடுத்தும் ஒரு சகோதரர்.
மதுராந்தகன் என அழைக்கப்பட்ட சோழகங்கன்..
அடுத்து ஒரு சகோதரர்..
பராந்தகன் என்னும் சோழ அயோத்தி அரசன்
அடுத்து..
இரண்டாம் இராஜேந்திரரின் மகன்களாக ஆறுபேர் உள்ளனர்.
1.இராஜேந்திரன்
என்னும் உத்தமச்சோழன்..
2. முடிகொண்ட சோழன் என்னும் விஜயாலயன்.
3. சோழகேரளன்.
4. கடாரங்கொண்ட சோழன் என்னும் சோழஜனகராஜன்.
5. முடிகொண்ட சோழன் என்னும் சுந்தரசோழன்.
6.இரட்டபாடி கொண்டான் என்னும்
சோழகுச்சியராசன்.
இரண்டாம் இராஜேந்திரனின் பேரன்களாக இரண்டு பேர்.
1. மதுராந்தகன்என்னும் சோழவல்லபன்.
2.ஆனைச்சேவகன் என்னும்
நிருபேந்திரசோழன்.
ஆக.. இந்த கல்வெட்டுச் செய்தியின்படி
முதலாம் இராஜேந்திரனுக்கு மக்கள் 6பேர் என்பது
தெளிவாகிறது ..
1. இராசாதிராசன் ( 1054 ல் கொப்த்துபோரில் இறப்பு)
2. இரண்டாம் இராஜேந்திரன்.
3. மும்முடிசோழன் என்னும் சோழபாண்டியன்.
4. வீரசோழன் என்னும் கரிகாலன் ( வீரராஜேந்திரன்)
5.மதுராந்தகன் என்னும் சோழகங்கன்.
6. பராந்தகன் என்னும் சோழ அயோத்திராசன்.
கல்வெட்டின் அடுத்தப்பகுதி..
கொப்பத்துப்போரை நம் கண்முன் நிறுத்துகிறது.
கி.பி. 1054 ஆம் ஆண்டு..
சோழர்களுக்கும், சாளுக்கியர்களுக்கும் மோதல்.
கொப்பம் என்னும் இடத்தில் நடந்த பெரும் போர்.
சோழப்படை.. சக்கரவர்த்தி இராசாதிராசன் மற்றும்
அவரது தம்பி இரண்டாம் இராஜேந்திரன் தலைமையில்
அணிவகுத்தது..
சாளுக்கியர்கள்.. அரசன் ஆகவமல்லன் தலைமையில்
அணிவகுத்தது..
கடும்போர்.. முன் வரிசையில் சக்கரவர்த்தி இராசாதிராசர் முன்னேறிச் சென்று தாக்குதலை தொடர்ந்தார்.. பின்வரிசையில் இரண்டாம் இராஜேந்திரர் நிலைகொண்டார்.
யானைமீது அமர்ந்திருந்த இராசாதிராசர் தொடர்ந்து
முன்னேறினார்.. சாளுக்கியர்களின் அம்பிற்கு இலக்காகி யானை மேல் அமர்ந்தவாறே வீர சொர்கக்கம் அடைந்தார்..
சோழர் படையில் பெருங்குழப்பம் ஏற்பட்டது..
இரண்டாம் இராஜேந்திரன் சோழ வீரர்களை ஊக்கப்படுத்தி .. மீண்டும் களம் கண்டார்..
மீண்டும் கடும்போர்.. இரு புறமும் கடும் சேதம்.
சோனாட்டு வீரர்கள் பலர் இறந்தனர்.
இராஜேந்திரன் ஒரு யானை மீது அமர்ந்து முன்னேறினார்..
கடும் போர்.
சோழப்படை வெற்றியை நோக்கி பயணித்தது.
தன்னை சூழ்ந்த சாளுக்கிய தளபதிகளான.
ஜெயசிங்கன், புலகேசி, தசபன்பன், மொட்டையன்,
நன்னி நுளம்பன் ஆகியோரை இராஜேந்திரன் கொன்றார்..
சோழர்கள் வெற்றி பெற்றனர்.
ஆகவமல்லன் தப்பியோடினார்..
முழு வெற்றியை இராஜேந்திரன் அடைந்தார்.
சத்ருபயங்கரன், கரபத்திரன், மூலபத்திரன் என்னும்
பெயர் கொண்ட சாளுக்கிய பட்டத்துயானைகள்
இராஜேந்திரன் வசமாயின.. வராககொடிகளும் கைப்பற்றினார்.
சாளுக்கியரின் எண்ணற்ற யானைகளும், குதிரைகளும்
ஒட்டகங்களும், பெண்டிர் பண்டாராங்களும் சோழர் வசமாகின..
இரண்டாம் இராஜேந்திரன், அம்புகளால் தைத்த காயங்களிருந்து வடிந்த செந்நீரை, திருமஞ்சன நீராக
கொண்டு அதே போர்களத்தில் மகுடாபிசேகம்
செய்தார்.. அங்கு ஒரு வெற்றித்தூணும் நிறுவப்பட்டது..
கல்வெட்டின் கடைசிப்பகுதி ..
வழக்கம்போல் ஒரு நிவந்தம்.
ஒட்டுமொத்த சோழ வாரிசுகளின் பெயர் மற்றும் பட்டங்களுடன் காணப்படும் சிறப்பானக் கல்வெட்டு சாசனம்.
அன்புடன்
மா.மாரிராஜன்.
Comments
Post a Comment