முதலாம் இராஜராஜரின் இறுதிக்காலம்

 முதலாம் இராஜராஜரின் இறுதிக்காலம்."




பார்புகழும் பேரரசர் இராஜராஜரின் இறுதிக்காலம் ...
 சிவபதம் அடைந்த விபரம்..
 அவரது நினைவிடம்....

நீண்ட நாட்களாக தேடப்படும் ஒரு வரலாறு. இதுவரை அவரது நினைவிடம் குறித்த செய்தி உறுதி
செய்யப்படவில்லை.

ஆனால்..
இராஜராஜரின் இறுதிச் சடங்கு நடந்த இடம் பற்றி ஒரு கல்வெட்டு உள்ளது. 

இராஜராஜரின் மைந்தன் இராஜேந்திரன் தனது தந்தைக்கு இறுதிச் சடங்கு செய்த ஒரு கல்வெட்டு.

இராஜராஜர் பதவிக்கு வந்தது 985. 
அவரது 29 ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டே இறுதி என்பதால்.. 
985 + 29 = 1014.

கி.பி.1014 இல் இராஜராஜர் சிவபதம் அடைந்திருக்கவேண்டும்.

கும்பகோணம் அருகே ..
திருவலஞ்சுழி கோவில்.
கோவிலுக்கு முன்பாக ஷேத்திரபாலருக்கு ஒரு கோவில் உண்டு. இக்கோவிலை எடுத்தவர் இராஜராஜரின் பட்டத்தரசியான லோகமாதேவி அவர்கள். இக்கோவிலில் ஒரு கல்வெட்டு உள்ளது.

இராஜேந்திரனின் மூன்றாம் ஆட்சியாண்டு
(கி.பி.1015) .. 221 ஆம் நாள்.. அதாவது இராஜராஜர் சிவபதம் அடைந்த மறுவருடம்..
இந்நாளில் இராஜேந்திரன் ஒரு சடங்கு செய்கிறார்.
எள் மலை புகுந்து..
(தில பர்வதம் புக்கருளி) 
அதாவது எள் செடிகளின் வழியே நுழைந்து ஒரு சடங்கு செய்து..ஷேத்திரபாலர் திருவடியில் 12 பொற்பூக்களை வைத்து வழிபடுகிறார்.

எள் வைத்து செய்யப்படும் சடங்கு..
நீத்தார் சடங்கு என்பது ஒரு வழக்கமான முடிவாகும்.

ஆகவே..
இராஜேந்திரன் செய்தது தன் தந்தை இராஜராஜரின் முதலாமாண்டு திவசம் என்பது ஒரு சில ஆய்வாளர்கள் முடிவு.

எள் சடங்கை மட்டும் வைத்து இது நீத்தார் சடங்கு என்பதை முடிவு செய்ய இயலாது என்பதும் ஒரு சில ஆய்வாளர்கள் கருத்து.

ஆனால்... இந்த எள் வைத்து செய்த சடங்கு நீத்தார் சடங்குதான் என்று முடிவு செய்ய மேலும் சில தரவுகள்..

இராஜராஜரின் தேவியான லோகமாதேவி பார்த்து பார்த்து பரவசமுடன் கட்டியக் கோவில்தான் ஷேத்திரபாலர் கோவில். இந்தக் கோவில் வளாகத்தில்தான் இராஜேந்திரன் இந்த சடங்கை செய்கிறார்.

நீத்தார் சடங்கு செய்ய..
ஒரு நீர்நிலை.. கரையில் ஒரு பிள்ளையார்.. இவ்விரண்டும் உள்ளது.

கோவிலின் தெற்குப்பகுதி வாயில் நீண்டநாட்களாக மூடியே உள்ளதாம். வாயிலின் ஒரு பக்கச்சுவற்றில் ஒரு ஆணும் பெண்ணும் 
செடி ஒன்றின் அருகே உள்ளனர். மறு பக்கச்சுவற்றில் ஒருவர் ஒரு லிங்கத்தை வணங்குகிறார் மற்றொருவர் அவருக்கு அருகே உள்ளார்.

சிவபாதசேகரன் என்பது இராஜராஜரின் தீட்சைப் பெயர் என்கிறார்கள். தீட்சைப் பெற்ற ஒருவருக்கு தீட்சைப்பெற்றவர்தான் இறுதி சடங்கு செய்யவேண்டுமாம். 
ஆக. இராஜேந்திரனும் தீட்சை பெற்றிருக்க வேண்டும். இராஜேந்திரனின் தீட்சைப்பெயரான சிவசரணசேகரன் என்னும் பெயர் திருவலஞ்சுழியில் மட்டுமே உண்டு.

திருவலஞ்சுழி..
பட்டீஸ்வரம்..பழயாறை சோழன் மாளிகை.. அனைத்தும் ஒரேபகுதி.

பழயாறையில்தான் பஞ்சவன் மாதேவியின் பள்ளிப்படை உள்ளது.

மிக.மிக. அருகில்தான் உடையாளூர் உள்ளது.

உடையாளூர்.
அருமொழிதேவ
வளநாடு.. சிவபாதசேகரமங்கலம்.
சிவபாதசேகரஈஸ்வரமுடையார்.... 
சிவபாத சேகர அனுக்கிரகமூர்த்தி..
சிவபாதசேகரதேவர் திருமாளிகை
என்று முழுக்க முழுக்க..
கல்வெட்டுச் செய்திகள்
உடையார் இராஜராஜரின் நினைவுகளை சுமந்து நிற்கும் ஊரான உடையாளூர் இருப்பிடமும் திருவலஞ்சுழிக்கு மிக அருகில்தான் உள்ளது...
நன்றி 
மா.மாரிராஜன்..

Refrence ..
S.i.i.vol 8.no 236

Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

பாலக்காட்டு கணவாய் "இராஜகேசரிப் பெருவழி