இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர்

 



இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையரின் விருதுப் பெயர்களைக் கொண்டிருக்கும் தமிழ்ப் பல்லவ கிரந்த கல்வெட்டு. இன்றைய நவீனத் தமிழ் எழுத்துமுறைக்கும் பல்லவர்களே முன்னோடிகள் என்பதற்கு மற்றொரு தெளிவான சான்று. செந்தலை சிவன் கோயிலின் தூணில் இக்கல்வெட்டு உள்ளது. முத்தரையர் வம்சத்தினர் பல்லவர்களிடம் சிற்றரசர்களாக இருந்து, அன்றைய சோழதேசப்பகுதிகளில் ஆட்சிப் புரிந்தவர்கள். பல்லவமல்லன் இரண்டாம் நந்திவர்மனுடன் கைக்கோர்த்திருந்தவர் தான் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் எனும் சுவரன் மாறன் ஆவார். நந்திவர்மனின் தளபதியும், மற்றொரு சிற்றரசனுமான உதயச்சந்திரனோடு இணைந்து சேர, பாண்டியர்களுக்கு எதிரான பன்னிரண்டு போர்களில் பங்கேற்றவராக அறியப்படுகிறார்.


ஸ்ரீ தமராலயன், ஸ்ரீ அபிமாநதீரந், ஸ்ரீ கள்வரகள்வன், ஸ்ரீ ஷத்ருகேஸரி என பெரும்பிடுகு முத்தரையரின் விருதுப் பெயர்கள் இக்கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளன. மெய்யெழுத்துப் புள்ளிகளானது இன்றிருப்பதைப் போல் எழுத்துகளின் மேலேயே வைக்கப்பட்டிருப்பதையும நீங்கள் காணலாம்.

புகைப்படம் 1: முனைவர் மைக்கேல் லாக்குட்டின் 'தமிழ்ப் பல்லவ கிரந்த உருவாக்கம்' என்ற கட்டுரையில் உள்ள கல்வெட்டு எழுத்துகளின் படியெடுப்பு.

புகைப்படம் 2: செந்தலை கோயிலில் உள்ள மூலக்கல்வெட்டு. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற இணைய பக்கத்தில் இருந்து இப்புகைப்படத்தை எடுத்திருக்கிறேன். நான் எடுத்த புகைப்படம் அல்ல. இதில் மூன்று விருதுப் பெயர்கள் மட்டுமே உள்ளன. நேரடியாகச் சென்றால், பிற பெயர்களை தாங்கிய கல்வெட்டுகளையும் காண முடியுமென்று நினைக்கிறேன்.

பல்லவ ஆய்வாளர்களின் நூல்களையும் கட்டுரைகளையும் பொறுமையாக வாசித்து, அவற்றில் உள்ள தகவல்களைத் திரட்டி, நான் மிகவும் சுருக்கமாக இங்கே பதிகிறேன். உழைப்பும், நன்றியும், பெருமையும் ஆய்வாளர்களுக்கே உரியன.

பல்லவ! பல்லவ!

சக்கரவர்த்தி பாரதி,
28.01.2022

Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

கல்வெட்டில் குற்றம், தண்டனை, தீர்வு