நீர்ப் பிரச்சினை கல்வெட்டு

 கொங்கு சோழன் வீரராஜேந்திரனின் பேரூர் நீர்ப் பிரச்சினை கல்வெட்டு




கொங்கு நாட்டு பேரூர் நொய்யல் ஆற்றின் கரையில் இருந்த இரண்டு கிராமத்திற்கு வந்த போது கொங்கு சோழன் வீரராஜேந்திரன் அழகான தீர்ப்பு கூறி இருக்கிறார் அதை
கல்வெட்டிலும் வெட்டி வைத்து உள்ளார்கள்.

கோனேரின்மை கொண்டான் என்று தொடங்கும் கல்வெட்டு கொங்குச்சோழ மன்னன் வீரராஜேந்திரன் கிபி1207.

அரசனிடம் பிராமணர்கள் மாளிகை பழநத்தம் என்ற பகுதியில் புகலிடம் கொடுத்த சோழ சதுர்வேதி மங்கலம் என்ற ஊரை உருவாக்கி கொள்ளவும் நொய்யல் ஆற்றின் குறுக்கே ஒரு அணை கட்டிக் கொள்ளவும் அனுமதி கேட்கின்றனர். அதற்கு அரசன் அனுமதி ஆனை வழங்கும் போது தேவிசிறை என்ற பெயரில் அனை காட்டிக் கொள்ளலாம் ஆனால்  இவ்வணைக்கு கீழே உள்ள கோளுர் அணைக்கு நீர் விட்டு நிரம்பிய பின்பு தேவிசிறை அணையில் நீர் நிரப்ப வேண்டும் என்று என்று அவ்வானையில் குறிப்பிட்டு உள்ளார்.
 
கொங்கு நாட்டு மன்னர்கள் நீர்ப்பாசன த்தில் எல்லா தரப்பு மக்களும் நீர் கிடைக்க வேண்டும் என்று உறுதியாக இருந்து உள்ளார்கள்.

இடைக்கால கொங்கில் நீர் பாசனம் அரசனின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்து உள்ளது என்பதற்கு
சர்க்கார் பெரிய பாளையம் கல்வெட்டு சிறந்த சான்று 
பேரூர் கல்வெட்டு  

1 ஸ்வஸ்தி ஸ்ரீ திரபுவனச் சக்கரவர்த்திகள் கோனேரின்மை கொண்டான்
2 பேரூர் நாட்டு புகலிடம் கொடுத்த சோழ
3 சதுர் வேதி மங்கலத்துச் சபையாற்கும் 
4  பேரூர் ஊரார்க்கு நம்மோலை குடுத்தபடியா
5 வது இவர்கள் தங்களுக்கு நீர்த்தட்ட பெற வென
க்கு வந்த றிவைத்தமையிலிவர்கள் தங்களூரெல்
6லையில்  தேவிசிறை யென்கிற அனையடைத்து வாய்க்களும் 
7வெட்டிக் கோளுரனைக்குச் சேதம் வாராதபடி யவ்வனைக்கு
8 பின்பகா நீர் விட்டுக் கொள்ளப்பெறவாரகவுமிவர்கள்
9தங்களுரெல்லையில் மாளிகை பழநத்ததிலே 
10புகலிடம் கொடுத்த சோழ நல்லூர் என்று ஊரெற்றிக் கொள்வார்களாகவும்...

Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

பாலக்காட்டு கணவாய் "இராஜகேசரிப் பெருவழி