கல்வியில் சிறந்து விளங்கிய பெண்ணின் நடுகல்.

 கல்வியில் சிறந்து விளங்கிய பெண்ணின் நடுகல்



காலம்: 10ஆம் நூற்றாண்டு
கல்வியில் சிறந்து விளங்கிய ஆசிரியர்களின் நினைவாக நடுகற்கள் எழுப்பி வழிப்பட்டனர்  என்பதற்கு சான்றாக தருமபுரியில் கிடைத்த நுளம்பர் கால நடுகல் உள்ளது, இதேபோன்று கல்வியில் சிறந்து விளங்கிய பெண் ஒருவரின் நினைவாக மற்றொரு நடுகல்லும் உள்ளது.
தங்க சுரங்கங்கள் நிறைந்த குவலாளபுரத்தில் (கோலார் மாவட்டம்) ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கல்வி சாஸ்திரத்தில் சிறந்து விளங்கிய “சவிநிர்மாடி” என்ற பெண்ணின் நினைவாக எடுகப்பட்ட நடுகல்.
ஆசனத்தில் அமர்ந்தகொண்டு, மாணவர்களுக்கு கல்வி கற்று தருவது போன்று இந்நடுகல் வடிக்கப்பட்டுள்ளது, கையில் ஓலை சுவடி ஏந்திய படி, அருகினில் புத்தக்ங்கள் வைக்கும் ஒரு சிறு நாற்காலியும் உள்ளது, “சவிநிர்மாடி” என்ற பெண் ஏதேனும் கடிகையின் ஆசிரியராக இருக்க கூடும்.
கல்வெட்டு செய்தி
"ஸ்ரீ ஹரி ஸித்தி நாகார்ஜுனய்யா நந்திகப்பேவின் மகள் சவிநிர்மாடி சகல சாஸ்திர பிரசித்தி கற்று அறிந்தவள்" என்ற கன்னட கல்வெட்டு உள்ளது.
ஸ்வஸ்தி ஸ்ரீ என்று கல்வெட்டு பெரும்பாலான கல்வெட்டுகள் தொடங்கும் ஆனால் இந்த நடுகல் கல்வெட்டு ஸ்ரீ ஹரி ஸித்தி என தொடங்குகிறது பெருமாளின் சித்தம் என அர்த்தம் கொள்ளலாம் .

Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

பாலக்காட்டு கணவாய் "இராஜகேசரிப் பெருவழி