விநாயகர் உருவம் பொறித்த சுடுமண் முத்திரை:
விநாயகர் உருவம் பொறித்த சுடுமண் முத்திரை
இந்திய அளவில் புகழ்பெற்ற பாலியல் மருத்துவர் (செக்ஸாலஜிஸ்ட்) பத்மஸ்ரீ. டாக்டர். பிரகாஷ் கோத்தாரி இவர் பாலியல் சார்ந்த ஏராளமான கலைப் பொருட்களை சேகரித்து வைத்துள்ளார்.
மும்பை சோர் பஜாரில் வாங்கிய ஒரு கலைப் பொருளுடன் சேர்ந்து கிடைத்த இந்த சுடுமண் முத்திரை கி.பி. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
சுடுமண் முத்திரையின் முன்பக்கத்தில் விநாயகரும் பின்பக்கத்தில் நந்தியும் பிரம்மி வரிவடிவத்தில் "ஜோகேஸ்வர்" என்றும் பொறிக்கப்பட்டுள்ளது.
இம்முத்திரையின் விட்டம் 20மி.மீ. தடிமன் 5மி.மீ. எடை 2.09கிராம். இந்த முத்திரையை ஆராய்ந்த பல்வேறு அறிஞர்கள் இதன் பழமையை உறுதிப்படுத்தியுள்ளனர்.
தார்வாட் பல்கலைக்கழகத்தின் டாக்டர் சீனிவாசன் ரித்தி, புனே டெக்கான் கல்லூரியின் பேரா. டாக்டர். அபிஜித் தந்தேகர், மைசூர் இந்தியக் கல்வெட்டியல் துறையின் இயக்குனர் டாக்டர். ரவிசங்கர் ஆகியோர் இம்முத்திரை பொ.ஆ. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கருதுகின்றனர்.
Comments
Post a Comment