அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை கண்டுபிடிப்பு

                  பழமையான  கதாயுதம் கண்டுபிடிப்பு 
     
                         (2200 YEARS OLD '' MACE HEAD ''STONE OBJECT DISCOVERED )

     கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள மருங்கூர் கிராமத்தில் சுமார் 2200 ஆண்டுகள் பழமையான கல்ஆயுதத்தை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறையை  சார்ந்த ஆய்வாளர் உதவிப்பேராசிரியர்முனைவர் ஜெ.ஆர். சிவராமகிருஷ்ணன் கண்டறிந்துள் ளார்.

இரும்புக்காலப் பண்பாடு
                               
  மருங்கூர்  கிராமத்தில் உள்ள  அரசு மருத்துவ மனைக்கு வடக்கே  உள்ள  பகுதியில் கிழக்கு மேற்காக    5.5 ஏக்கர் பரப்பளவில் சுமார் 2200 ஆண்டுகளுக்கு  முன்பு இப்பகுதியில்  வாழ்ந்த இரும்புக் காலத்தை சார்ந்த மக்கள் இறந்தவர்களை  புதைக்கப் பயன்படுத்தப்பட்ட  முதுமக்கள் தாழிகள்  காணப்படுகின்றன . கடந்த 2009 ஆண்டு இவ்வூரை சார்ந்த  ராமலிங்கம் என்பவர்  தமது நிலத்தை கனரக எந்திரம் மூலம் சீர் செய்யும் பொது  நான்கு  அடி  ஆழத்தில் உடைந்த   முதுமக்கள்  தாழிகள் மற்றும்  அதன்  மூடுகற்களும் வெளிப்பட்டன . அப்பகுதியில் இருந்து  தமிழ் பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட மட்கல ஓடுகள்  கிடைக்கப்பட்டது.

பண்டைய கால மக்களின் வாழ்விடப் பகுதி
                      
மருங்கூர் கிராமத்தின் தெற்குப்பகுதியில் அமைந்துள்ள உள்ள  குளத்தின் கிழக்குக் கரைப் பகு தியில்  பத்தடி உயரமும் ஒரு ஏக்கர் பரப்பளவும்  கொண்ட பண்பாட்டு மேடு ஒன்று உள்ளது . இப் பகுதியில் கடந்த 2005 ஆம் ஆண்டு சாலை சீரமைப்பதற்காக  பள்ளம் தோண்டப்பட்ட போது   7 x 21 x  42 செ.மீ அளவுகளை கொண்ட செங்கற்கள் மற்றும் சிவப்பு நிற மட்கல ஓடுகள் , நான்கு  கால்களுடன்  கூடிய அம்மிகல் , பெண்கள் விளையாடுவதற்காக பயன்படுத்தப்பட்ட சில்லு கரு விகள்  போன்றவை வெளிப்பட்டுள்ளது. மேலும்  சுமார் 9000  ஆண்டுகளுக்கு  மூன்பு  மருங்கூர் பகுதியில்  நுண்கற்கால மக்கள் பயன் படுத்திய  கற்கருவிகள்  ,கற் செதில்கள் மற்றும்  பிறை வடிவ  கல்லாயுதங்களும் இப்பகுதியில் நடத்தப்பட்ட மேற் களஆய்வில்  கண்டுபிடிக்கப்பட்டுள் ளன .
     
மருங்கூர்  பகுதியில் சிறிய மற்றும் பெரிய அளவிலான கூழாங்கற்கள் மண்ணின் மேற்பரப்பில் பரவலாக காணப்படுகின்றன. இவைகள்  சுமார் 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தொன்றி யவை. இங்கு வாழ்ந்த நுண் கற்கால மக்கள் விலங்குகளை வேட்டையாடுவதற்காக தங்களுக்கு தேவையான  கல் ஆயுதங்களை இந்த கூழாங்கற்களில் இருந்தே தயாரித்துள்ளனர். 

'' கதா '' ஆயுதம் 
               
கடந்த  இரண்டு மதங்களுக்கு முன்பு இவ்வூரை  சார்ந்த  ராஜசேகர் என்பவர் தமது தோட்டத்தில் மரக்கன்றுகள் நடுவதற்காக தோண்டிய போது  சுமார்  மூன்றடி ஆழத்தில் துளைகளுடன்  கூடிய கல் ஆயுதம்  கிடைத்திருப்பதாக சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக வரலாற்றுத் துறைக்கு தகவல் கொடுத்ததின் விளைவாக இத் துறையை சார்ந்த  தொல்லியல் ஆய்வாளரும் பேராசிரியருமான சிவராமகிருஷ்ணன் (இந்த மாதிரிப்படம்  GOOGLE பகிர்வில் எடுக்கப்பட்டது நன்றி-GOOGLE ) 



மற்றும் ஆய்வு மாணவர்களும்  மருங்கூர்  சென்று கல் ஆயுதத்தை  ஆய்வு செய்தனர். 1050  கிராம் எடை கொண்ட கூழாங்கல்லின்  நடுப்பகுதியில் 6 செ.மீ அளவில் வட்ட வடிவ துளை இடப்பட்டுள்ளது. மேலும்  12 செ.மீ சுற்றளவும், 6 செ.மீ. கணமும் கொண்டதாக இந்த கல்  ஆயுதம் வடிவமைக்கப் பட்டுள்ளது.
                 
இந்த கல் ஆயுதத்தின்  நடுவில் உள்ள துளையில் 6 செ.மீ.கண அளவு கொண்ட  ஒரு வலிமையான  மரக் குச்சியினை  சொருகி  கதை போன்ற  தற்காப்பு ஆயுதமாக பண்டைய கால மக்கள் இதை பயன்படுத்தி  இருக்கலாம் .மேலும்  நெல் மற்றும் பயறுவகை தானியங்கள  பிரித்தெடுக்கவும் , விலங்கினங்களை  வேட்டையாடவும் , சுத்தியல் போன்ற கருவியாகவும் இந்த  கல் ஆயுத்தத்தை பயன் படுத்தி இருக்கலாம். 

                   
இந்த கல் ஆயுதம்  கிடைக்கப்பட்டுள்ள  இடத்தில் இருந்து சுமார் 100 மீட்டர்  தூரத்தில் இரும்புக் கால பண்பாட்டை சார்ந்த மக்களின்   முது மக்கள் தாழிகள் காணப்படுவதாலும்    மேலும் இதே பண்பாட்டுக்  கூறுகளைக் கொண்ட   வரலாற்றுத் தடையங்கள் பெருமளவில்  கிடைப்பதால்  இந்த'' கதை '' போன்ற கல்லாயுதமும் அதே  காலக்கட்டத்தை  சார்ந்ததாக  இருக்கலாம் என்று  பேராசிரியர் சிவராமகிருஷ்ணன் தெரிவித்தார்..... (கீழே படம்)


Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

கல்வெட்டில் குற்றம், தண்டனை, தீர்வு