அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை ஆய்வாளர் கண்டுபிடிப்பு
கடலூர் அருகே 2200 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுடுமண் உறைகேணி
கண்டுபிடிப்பு.
இது
பற்றி சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறையை சார்ந்த தொல்லியல்
ஆய்வாளரும் உதவிப் பேராசிரியருமான முனைவர் ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன் கூறியதாவது. கடலூர் OT அருகே உள்ள அப்பர்
குட்டைக்கும் தெற்கே உள்ள கொண்டங்கி ஏரியில் 100
நாள் வேலை திட்டத்தின் மூலம் ஏரியை தூர்வாரும் போது வட்டவடிவில் மண் ணால்
செய்யப்பட்ட தொட்டி கிடைத்து இருப்பதாக சிதம்பரம் அண்ணா மலைப் பல்கலைக் கழக
வரலாற்றுத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதன் பேரில் அங்கு ஆய்வு செய்யப்பட்டது.
சுடுமண்
உறை கேணி
மக்கள் எடுத்து வைத்திருந்தது சுமார் 2200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சுடுமண்
உறை கேணிக்கு பயன் படுத்தப்பட்ட
வட்டவடிவிலான சுடுமண் உறையாகும். இது 42
செ.மீ உயரம் , 54 செ.மீ விட்டம் 181 செ.மீ சுற்றளவு கொண்டதாகும் . மேலும் ஏரியின்
உட் பகுதி முழுவதும் மேற்கள ஆய்வு செய்ததில் உறை கேணி கிடைக்கப்பட்ட பகுதியில்
இருந்து தெற்கு பகுதியில் கருப்பு – சிவப்பு நிற மட்கல ஓடுகளும் , சுமார் 100 அடி
தூரத்தில் முதுமக்கள் தாழிகளின் உடைந்த பாகமும் கிடைக்கப் பட்டுள்ளது . இவை களை
வைத்து ஆய்வு செய்ததில் இப்பகுதியில் பெருங்கற்காலத்தை சார்ந்த மக்கள்
வாழ்ந்துள்ளனர் என்பதை அறியமுடிகிறது . உறைகேணிக்கு பயன் படுத்தப்பட சுடுமண்
உறையானது நன்கு சுடப்பட்டதாகும். இதன்
தயாரிப்பு தொழில் நுட்பத்தை பார்க்கும் போது இது கி.மு. 2 ஆம் நூற்றாண்டை
சார்ந் ததாகும் என்பதை அறியமுடிகிறது . மேலும் இங்கு வாழ்ந்த பெருங்கற்கால மக்களின்
வழ்விடப் பகுதியும் அதன் அருகே இறந்தவர்களை புதைக்கும் இடுகாடும்
இருந்திருக்கலாம். மேலும் மணற்பாங்கான பகுதியில் ஒரு கிணறு அமைக்கப்படிருந்தால் அதற்கு கேணி என்றும், மலைப்பாங்கான இடத்தில் தோண்டப்பட்திருந்தால் அதற்கு கிணறு என்றும் கல்வெட்டு சான்றுகள்
மூலம் அறியமுடிகிறது .எனவேதான் திருவள்ளுவர் மணல் பகுதியில்
அமைக்கப்பட்டதற்கு கேணி என்பதை ‘’ மணற்கேணி’’ என்று தாம் எழுதிய திருக்குறளில்
குறிப்பிடுகிறார்.
கடற்கறை
பகுதி
சுடுமண்
உறை கேணி கிடைத்த இடத்தில் கடற்கரை மணல் பெருமள வில்
கிடைப்பதால் இங்கு பெருங்கற்காலத்திலேயே இப் பகுதி வரை கடல் இருந்திருப்பதற்கு
வாய்ப்புள்ளது . கி.பி 7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அப்பர் சுவாமிகளை சமணத்தில்
இருந்து சைவ சமையத்துக்கு மாற மறுத்ததாள் முதலாம் மகேந்திரவர்மபல்லவன் அப்பர் சுவாமிகளை கற்களால் பூட்டி கடலில் வீச செய்தான். பிறகு பிணைக்கப்பட்ட கல்லையே தெப்பமாகக் கொண்டு கரைசேர்ந்த
இடம் இன்றைய கரையேறி விட்டக்குப்பமாகும். எனவே கி.பி. 7
ஆம் நூற்றாண்டில் கடல் இன்றைய வண்டிப்பளையம் வரை இருந்துள்ளதை தேவார பாடல் மூலம் அறியமுடிகிறது.
ஆனால் சுமார் 2200 ஆண்டுகளுக்கு முன்பே கடல் இன்றைய வண்டிப்பாளையம் மற்றும் உறை கேணி
கிடைத்த கொண்டங்கி ஏரி பகுதி வரை இருந்திருக்கலாம். இத்த கடற் கரை ஓட்டிய பகுதியில்
தான் பண்டைய கால பெருங்கற்கால மக் கள்
வாழ்ந்துள்ளனர் என்று உதவிப்பேராசிரியர் சிவராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
Comments
Post a Comment