அண்ணாமலைப்பல்கலைக்கழக வரலாற்றுத்துறை கண்டுபிடிப்பு





                                            முனைவர் J.R.சிவராமகிருஷ்ணன்
                                                         வரலாற்றுத்துறை
                                            அண்ணாமலைப் பல்கலைக் கழகம்
            
வடலூரில்  சுமார்  2400 ஆண்டுகளுக்கு  முன்பாகவே  இரும்பு  காலப் பண் பாட்டை சார்ந்த  மக்கள்  வாழ்ந்ததற்கான  சான்றுகள்  கிடைத்துள்ளன குறிப் பாக  முதுமக்கள்  தாழிகள் . மேலும்  கி.மு. 2 ஆம்  நூற்றாண்டை  சார்ந்த  அதாவது  சங்ககால பண்பாட்டை சார்ந்த    மக்கள்  வடலூரில்  உள்ள  கோட் டக்கரை பகுதியில்  வாழ்ந்தற்கான  செங்கற்களால்  கட்டப்பட்ட  கட்டடப்  பகுதி  சமிபத்தில்  கண்டறியப்பட்டுள்ளன. மேலும்   கி.பி. 10 ஆம்  நூற்றாண்டை  சார்ந்த  இடைக்கால  மக்கள்  இப் பகுதியில்  வாழ்ந்துள் ளனர். குறிப்பாக  இக் காலக்கட்டத்தை  சார்ந்த  மட்பாண்ட  ஓடுகள் மற்றும்  செங்கற் கட்டடப் பகுதி யானது  தற்போது  வடலூர்  காளிகோயிலை  ஓட்டிய கிழக்குப் பகுதியில்  கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. மேலும்  இந்த  பகுதியில்  இதே காலக்கட்டத்தை  சார்ந்த  அதாவது கி.பி. 9 ஆம்  நூற்றாண் டில்  கட்டப்பட்ட மிகப்பெரி சிவன்கோயில் மற்றும்  குடியிருப்பு  பகுதிம்   கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது  வடலூரில்  உள்ள  ஐய்யன்  ஏரியை  கி.பி. 13 ஆம் நூற்றாண்டில்  சேந்தமங்கலத்தை  தலைநகராக  கொண்டு ஆட்சி செய்த  முதலாம் கோப்பெருஞ்சிங்கன் வெட்டியதாக  அறியமுடிகிறது .......எனவே  கி.மு 4ஆம்  நூற்றாண்டு  முதல்  தற்காலம்  வரையில்  மக்கள்  வாழ்ந்து  வருகின்றனர்......வடலூரின்  பழைய  பெயர்  பார்வதிபுரம்  ஆகும்.....

Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

கல்வெட்டில் குற்றம், தண்டனை, தீர்வு