அண்ணாமலைப் பல்கலைக் கழக வரலாற்றுத்துறை கண்டுபிடிப்பு
கோவை அருகே தமிழ் பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட மட்கல ஓடு கண்டுபிடிப்பு
உதவிப்பேராசிரியர்J.R.சிவராமகிருஷ்ணன்
வரலாற்றுத்துறை
அண்ணாமலைப் பல்கலைக் கழகம்.
கோவை அருகே
நடைபெற்ற தொல்லியல் கள ஆய்வில் சுமார்
1850 ஆண்டுகள் பழைமை வாய்ந்த தமிழ் பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட கருப்பு நிற
மட்கல ஓடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .
பொன்னேகவுண்டன்புதூர்
கோவை மாவட்டம் அன்னூர் வட்டம் நாரணபுரம் பஞ்சாயத்திற்கு
உட்பட்ட சாலையூரில் இருந்து
ஒரு கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது பொன்னே கவுண்டன் புதூர். இவ்வூரின் அருகே
பாய்ந்தோடும் கெளசிகா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள
தடுப்பணையை ஒட்டியப் பகுதியில் ஏராளமான மட்கல
ஓடுகள் வெளிப்பட்டுள்ளன. அங்கு கிடைத்த மட்கல ஓடுகளை சேகரித்து சரியான காலவரையறை செய்வதற்காக சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்
கழக வரலாற்றுத் துறைக்கு வாகராயன் பாளையத்தை
சார்ந்த சமூக ஆர்வலர் செல்வராஜ் அனுப்பி வைத்தார்.
தமிழ் பிராமி
பொன்னேகெளன்டன்புதூரில்
கிடைக்கப்பட்ட மட்கல ஓடுகளை ஆய்வு செய்த அண்ணாமலைப் பல்கலைக் கழக வரலாற்றுத்துறையை சார்ந்த தொல் லியல் ஆய்வாளரும் உதவிப் பேராசிரியர்களுமான சிவராமகிருஷ் ணன், கண்ணன் ஆகியோர் இம்மடக்கல ஓடுகள் கி.பி.1- 2 ஆம் நூற் றாண்டை
சார்ந்து என்று கூறினர் . மேலும் இங்கு கிடைக்கப்பட்ட கருப்பு நிற மடகல ஓட்டின்
மீது தமிழ் பிராமி எழுத்து பொறிப்புகள் இருந் தன. இந்த
எழுத்துக்கள் தமிழ் பிராமி எழுத்துக்களின் வளர்ச்சி காலக்கட் டத்தை சார்ந்தவை ஆகும். நன்கு சுடப்பட்ட மட்கல ஓட்டின் மீது
உள்ள எழுத்துக்களை ஆய்வு செய்த போது ‘’
ஆதானான் ‘’ என்று பொறிக்கப்பட் திருந்தது . எனவே இதில்
பொறிக்கப்பட்டுள்ள எழுத்து அமைப்புக்களை பார்க்கும் போது இதன் காலம் கி.பி. 1- 2
ஆம் நூற்றாண்டை சார்ந்தவை யாகும்.
காவிநிறம் பூசப்பட்ட மட்கல ஓடுகள்
இப்பகுதியில்
இருந்து சேகரிக்கப்பட மட்கல ஓடுகளில் அதிக எண்ணிக் கையில் காவிநிறம் பூசப்பட்ட(
RUSSET COATED WARE –ரசக்கோட்டேடு ) மட்கல ஓடுகள் அதிக எண்ணிக்கையில்
கிடைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மீது வளைந்த வெள்ளை நிற கோடுகள் வரையப்படுள்ளன.
இவ்வகை மட்கல ஓடுகள் உறையூரில் நடைபெற்ற அகழாய்விலும் கிடைக்கப்பட் டுள்ளது .
மேலும் சில வற்றில் துளைகள் காணப்படுவதால் அவைகள் வடிக்கும் தட்டுக்கலாக அக்கால
மக்களால் பயன் படுத்தி இருக்கலாம்.
Comments
Post a Comment