அண்ணாமலைப் பல்கலைக் கழகம் வரலாற்றுத்துறை கண்டுபிடிப்பு
உதவிப் பேராசிரியர்J.R.சிவராமகிருஷ்ணன்
வரலாற்றுத்துறை
அண்ணாமலைப் பல்கலைக் கழகம்.
காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ஓமாம் புலியூரில் இருந்து தெற்கே ஒரு கி.மீ தூரத்தில்
கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரி அமைந் துள்ளது
. நேற்று வழக்கம் போல் மணல் அல்லும் போது சுமார் பத்தடி ஆழத்தில் சிவலிங்கம்
ஒன்று கிடைக்கப்பட்டுள்ளது
. அதனை ஜே
சிப்பி எந்திரம் மூலம் வெளியே எடுத்து வைக்கப்பட்டது .சிவலிங்கத்தின் உயரம் சுமார் 110
cm ஆகும்.
சிவலிங்கம் அதிக அலங்காரம் இன்றி எளிய
வடிவில் வடிக்கப்பட் டுள்ளது . மேலும் பிரம்ம, ருத்திர , விஷ்ணு பாகம் மற்றும் கோமுகை ஆகியவை எந்த வித பூ வேலைப்பாடும் இன்றி அழகிய சிற்ப ஆகம விதிப்படி வடிக்கப்பட்டுள்ளது. சிவலிங்கம் கிடைக்கப்பட்டுள்ள பகுதியை சுற்றி சோழர் கால புகழ் பெற்ற
சிவன்கோவில்களான உடையார்குடி . ஓமாப்புலியூர், மேல & கிழகடம்பூர் சிவன்கோவில்கள் உள்ளன .மேலும் வளமையான நிலங்களால் சுழப்பட்ட
வேளார் குடிகள் நிறைந்த இந்த காட்டுமன்னார்குடி பகுதியில் வைணவமும் வளம் பெற எப்படி வீரநாராயண விண்ணகர் கோவிலையும் வீர நாராயண பேரேரியையும்
கட்டுவித்ததோடு அல்லாமல் அங்கு புதிய மக்கள் குடியிருப்பையும்
ஏற்படுத்தி இந்த பகுதியில் ஆன்மிகத்தையும் வளம் பெற செய்துள்ளனர் . இன்று சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக வரலாற்று துறை சார்பில் நடைபெற்ற களஆய்வில் சிவலிங்கம் கிடைத்த பகுதியில் இடைக்கலத்தை சார்ந்த உடைந்த செங்கல்
துண்டுகள் & மட்பாண்ட ஓடுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.
எனவே இங்கு இடைக்கலத்தை சார்ந்த சிறிய அளவிலான சிவன்கோவில் இருந்திருக்க வாய்ப்புள்ளது. மேலும் கொள்ளிடக்கரையின் வடக்கு கரையோரங்களில் தொடர்ந்த ஆய்வு பணி நடைபெறும் என முனைவர் ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன் மற்றும் முனைவர் பி.கலைச்செல்வன்
தெரிவித்தனர். ராஜராஜன் , பிரபாகரன் , சுசெந்திரன் , தனசேகரன். ஆகியோர் கொண்ட ஆய்வு குழு ஆய்வு செய்து வருகின்றனர்.
Comments
Post a Comment