தளிஞ்சி - கேரள எல்லை

                     அழிந்த அரண்மனை 

                                                             பேராசிரியர் J.R. சிவராமகிருஷ்ணன்
                             வரலாற்றுத்துறை
                             அண்ணாமலைப் பல்கலைக் கழகம்.
       
        தளிஞ்சிக்கு மேற்கே  கேரளாவில் உள்ள உயர்ந்த மலைகளில் உற்பத்தியாகி  அமராவதி அணையில் வந்து  சேரும்  தேனாற்றின்  வடகரையில்  சுமார்  20 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய கோட்டை ,  குதிரை லாயம் ,கோவில் ,  மக்கள் வாழ்விடப் பகுதி போன்றவை  இப் பகுதியில் இருந்துள்ளது . அவைகளின்  இடிபாடுகளை  இன்று காணும்  போது  தமிழகத்தில்  நிகழ்ந்த அரசியல் மாற்றத்தால்  தமக்கு பாதுகாப்புக் கருதியே  இந்த  அடர்ந்த காட்டிற்கு வந்த  ஒரு இனக்குழு பிறகு இப்பகுதியையே  தங்களது  அரசியல்  தலைமையிடமாகக் கொண்டு வாழ்ந்துள்ளதை அறியமுடிகிறது. இங்கு  அமைக்கப்பட்டக் கோட்டை  முற்றிலும்  கருங்கற்களைக் கொண்டு  கட்டப்பட்ட ஒரு கற்கோட்டையாகும்.  சுற்றிலும்  கோட்டை மதில் மையத்தில் அரண்மனை மற்றும் அரசு அலுவலர்களின்  குடியிருப்பு , 250 மீட்டர்  தூரத்தில் அதாவது கிழக்குப் பகுதியில்  குதிரை  லாயம்  ஒன்று  இருந்துள்ளது. இங்கு குதிரைகளை கட்டிவைக்கப் பயன் படுத்தப்பட்ட துளையிடப்பட்ட  கற்கள்  மண்ணில் புதைக்கப்பட்ட  நிலையில்  இன்றும் காணமுடிகிறது.

குதிரை லாயம் மற்றும்  கோட்டையின் படம்.


Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

கல்வெட்டில் குற்றம், தண்டனை, தீர்வு