அண்ணாமலைப் பல்கலைக் கழக வரலாற்றுத்துறை கண்டுபிடிப்பு

அண்ணாமலைப் பல்கலைக் கழக வரலாற்றுத்துறை கண்டுபிடிப்பு


   சிதம்பரம்  அருகே  உள்ள வல்லம்படுகை  கிராமத்தில் சுமார் 300 ஆண்டுகள்  பழைமை வாய்ந்த கழிவு நீர் அகற்றும் தொட்டியை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக  வரலாற்றுத்து றையை சார்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஆய்வாளர்கள் ஆய்வு
      இவ்வூரை சார்ந்த  ராமமூர்த்தி  என்பவர்  சிலமாதங்களுக்கு  முன்பு  தமது  நிலத்தில் உள்ள மேட்டுப் பகுதியை   சீர் செய்யும்  போது  மண்ணின் மேற்பரப்பில்  உடைந்த  மட்பாண்ட ஓடுக ளும் ,  சிறிய  அளவிலான   வட்ட வடிவ ஓடுகளும்  வெளிப்பட்டுள்ளதாக  சிதம்பரம் அண்ணா மலைப் பல்கலைக் கழக வரலாற்றுத்துறைக்கு  தகவல் அளிக்கப்பட்டதன் விளைவாக  இத் துறையை  சார்ந்தஉதவிப்பேராசிரியரும்ஆய்வாளர்களுமான J.R.சிவராமகிருஷ்ணன் , P.கலைச் செல்வன் மற்றும் மாணவர்கள் அரவிந்த் , பாலாஜி ,ராஜராஜன் பிரபாகரன்  ஆகியோர் அப்பகுதிக்கு சென்று  ஆய்வு  செய்தனர்.

சுடுமண்  உறைகள்

      சீர் செய்யப்பட்ட மேட்டுப்பகுதியில்  இருந்து உடைந்த  மட்கல ஓடுகளும் மற்றும் 5 செ.மீ கன அளவு கொண்ட  உடைந்த செங்கல் துண்டுகள்  , 2 செ.மீ .கன அளவு கொண்ட உடைந்த சுடுமண் உறைகளும்  சேகரிக்கப்பட்டன.  குறிப்பாக  இப்பகுதியில்  அதிக  எண்ணிக்கையில்  சுடுமண் உறைகளின் உடைந்த பாகங்கள் காணப்பட்டன.

கழிவு நீர் அகற்றும் தொட்டி ( SOAK PIT)
       சீர் செய்யப்பட்ட  மேட்டுப் பகுதியின்  அடிப் பகுதியில்  28 செ.மீ. விட்டம் , 13 செ.மீ. உயரமும் , 2செ.மீ . கன அளவு கொண்ட மூன்று  சுடுமண் தொட்டிகள் ஒன்றன் மீது  ஒன்றாக அடுக்கப்பட் டியிருந்தது. இந்த மூன்று உறைகளின் இரு பக்கங்களிலும்  துளைகள்  இடப்பட்டிருந்தன. உறைகளின் அடியில்  ஆற்று மணல் ,உடைந்த செங்கல் துண்டுகள்  கொண்டு நிரப்பப்பட்ட பள்ளத்தில் இருந்து,   ஒன்றன் மீது  ஒன்றாக நன்கு  சுடப்பட்ட  சுடுமண் உறைகளை வரிசையாக அடுக்கி  வைக்கப்பட்ட குழியில் . வீட்டில் இருந்து  வெளியே றும் கழிவு  நீர் களை   சுடு மண்  குழாய்கள் மூலம் கொண்டுவந்து  இந்த  வட்டவடிவ  தொட்டியில் சேர்த்துள்ளனர். இவ்வாறு  இத்தொட்டியில்  சேர்க்கப்பட்ட  கழிவு நீரானது  தொட்டியில் உள்ள உடைந்த செங்கல் மற்றும் ஆற்று மணலால் நன்கு  வடிகட்டப்பட்டு  தூய்மையான  தண்ணீரானது  நிலத்தடியை சென்று  அடையும் நோக்கில் இந்த வட்டவடிவ கழிவு நீர் அகற்றும் தொட்டியை  இப்பகுதியில் வாழ்ந்த பண்டையகால மக்கள் பயன்படுத்தியமை பற்றி  அறியமுடிகிறது.

300 ஆண்டுகள்  பழமை வாய்ந்த கழிவு நீர் தொட்டி
     இங்கிருந்து  சேகரிக்கப்பட்ட உடைந்த  மட்பாண்ட ஓடுகள், செங்கல் துண்டுகள் , உடைந்த சுடுமண் குழாயின் பாகம் மற்றும்  கழிவு நீர் தொட்டிக்கு  பயன்படுத் தப்பட்ட   உடைந்த உரை களின் தொழில்நுட்பம் இவைகளை ஆய்வு செய்ததில்  இந்த வல்லம்படுகை பகுதியில்  வாழ்ந்த பண்டைய கால தமிழ் மக்கள்  தங்களது  வீட்டில் இருந்து வெளியேறும் கழிவு நீரானது  வீட் டின்  அருகே  தேங்க வைத்தால் அதன் மூலம்  தோற்று நோய்கள் பரவும்  அபாயம் இருப்பதை கருத்தில் கொண்டே .   இந்த மாதிரியான  சுடுமண் உறைகளைக் கொண்ட கழிவு நீர் தொட்டி களை பயன்படுத்தி உள்ளனர்  என்பதை அறிய முடிகிறது. மேலும் இது போன்ற  வட்ட வடிவ செங்கற்களால்  செய்யப்பட்ட கழிவு  நீர் தொட்டிகளை சிந்து சமவெளி மக்களும் பயன்படுத்தி உள்ளனர்  என்று முனைவர் ஜெ.ஆர். சிவராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
                   


Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

கல்வெட்டில் குற்றம், தண்டனை, தீர்வு