அண்ணாமலைப் பல்கலைக் கழக வரலாற்றுத்துறை தொல்லியல் ஆய்வு
அண்ணாமலைப் பல்கலைக் கழக
வரலாற்றுத்துறை ஆய்வு
முனைவர்J.R.சிவராமகிருஷ்ணன்
படம் : 1. முதனை - உடைந்த முதுமக்கள் தாழி.
படம்; 2. பழையப்பட்டினம் - இடைகால மட்கல ஓடுகள்.
கடலுர் மாவட்டம் விருத்தாசலம் அருகே
சுமார் 2300 ஆண்டுகளுக்கு
முன்பு வாழ்ந்த பெருங்கற்கால மக்களின் வரலாற்றுத் தடையங்கள் மற்றும் கி.பி. 11 - 13 ஆம் நூற்றாண்டை சார்ந்த மக்கள் வாழ்விடப் பகுதியையும் கண்டறிந்துள்ளனர்.
முதனை கிராமம்.
விருத்தாசலத்தில் இருந்து 15 கி .மீ. தூரத்தில் முதனை கிராமம் அமைந் துள்ளது .இவ்வூரில் உள்ள
செம்பையனார் கோயிலின் கிழக்கு பகுதியில் உள்ள சின்ன ஓடையில் சிலர் மண் தோண்டும் போது
முதுமக்கள் தாழி கள் வெளிப்பட்டுள்ளது .இதனை இவ்வூரை சார்ந்த ஆசிரியர்
குணசேகரன் அவர்கள் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக வரலாற்றுத்துறைக்கு தகவல் தந்ததின் மூலம்
மண்
எடுக்கப்பட்ட சின்ன ஓடையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
உடைந்த முதுமக்கள் தாழிகள்
மண் எடுக்கப்பட்ட பள்ளத்தில் 15
அடி இடைவெளியில் மூன்று முதுமக் கள் தாழிகள் முற்றிலும் உடைக்கப்பட்ட நிலையில் இருந்தன . அதன் அருகே கருப்பு - சிவப்பு மட்கல ஓடுகளும் , வழுவழுப்பான கருப்பு நிற மட்கல ஓடுகளும் , உடைந்த விளக்கு தாங்கிகளும் சிதைந்த
நிலையில் காணப்பட்டன இவைகளை ஆய்வு செய்ததில் இவைகளின் காலம் கி.மு .3 - 4 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் . மேலும்
மனித எலும்பு துண்டுகளும் காணப்பட்டன இவைகள் சிதைக்கப்பட்டு விட்டதன் விளைவாக (DNA ) மர பணு சோதனைக்கு உட்படுத்த முடியாது என ஆய்வாளர்கள் தெரிவித் தனர். முதனை கிராமத்தின்
மேற்கு பகுதி முழுவதும் களஆய்வு நடை பெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.
பழையப் பட்டினம்
விருத்தாசலம் தாலுக்காவிற்கு உட்பட்ட பழையப்பட்டினம்
கிராமத்தின் கிழக்கு பகுதியில் தமது முதல் கட்ட தொல்லியல் களஆய்வினை கடந்த இரண்டு மாதங்களாக
செய்து
வருகின்றனர். இதன் மூலம் இவ்வூரைப் பற் றிய பல புதிய வரலாற்றுத் தகவல்களை கண்டறிந்துள்ளனர்.
பொதுவாக பட்டினம் என முடியும் ஊர்கள் பண்டைய காலத்தில் வணிக மற்றும் வர்த் தக மையங்களாக விளங்கியவை என்ற அடிபடையில்
இவ்வூரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
நீராழி மேடு
சுமார் ஐந்து ஏக்கர் பரப்பளவில் உள்ள நீராழி மேட்டை சுற்றி
நடத்தப்பட்ட களஆய்வில் உடைந்த சிவப்பு நிற மட்கல ஓடுகள் , செங்காவிநிறம் பூசப் பட்ட மட்கல
ஓடுகளும் ,சொரசொரப்பான சிவப்பு நிற மட்கல ஓட்கள், தானி யங்களை சேமித்து வைக்கப்
பயன்படும் பெரிய அளவிலான மட்பாண்டங் களின் உடைந்த ஓடுகளும் இப் பண்பாடுப் பகுதியில் இருந்து சேகரிக்கப்
பட்டுள்ளன. மேலும் 6 X 19 X 23 செ.மீ. அளவுகளைக் கொண்ட செங்கற்க ளும் , கட்டடங்கள் கட்ட பயன்படுத்தப்பட்ட சுண்ணாம்பு காறைகளும்
இப் பகுதியில் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் பண்பாட்டு மேட்டினை ஒட்டிய கிழக்குப் பகுதியில் பெருங்கற்காலத்தை சார்ந்த முது மக்கள் தாழிகளின் உடைந்த பாகம், கருப்பு & சிவப்பு நிற மட்கல ஓடுகளும் கிடைத்துள்ளன.
'' ட '' - வடிவ கூரை ஓடுகள்
இந்தப் பண்பாட்டுப் பகுதியின் கிழக்குப் பகுதியில் உடைந்த'' ட ''
வடிவக் கூரை ஓடுகளின் பாகங்கள் கிடைத்துள்ளன .இவ்வகை கூரை ஓடுகள் இடைக்கால பண்பாட்டுப்
பகுதிகலான கங்கைகொண்டசோழபுரம், சேந்த மங்கலம் போன்ற இடங்களில் நடைபெற்றுள்ள அகழாய்வுகளிலும் கிடைத் துள்ளன. எனவே பழையப்பட்டினம் நீராழிமேட்டு
பகுதியிலும் இதேக் காலக் கட்டத்தை சார்ந்த அதாவது கி.பி. 11 - 13 ஆம் நூற்றாண்டை சார்ந்த மக்கள்
இப்பகுதியில் வாழ்ந்திருக்கலாம். மேலும் இந்த பகுதியில் சேகரிக் கப்பட்டுள்ள
மட்கல ஓடுகள் , அதில் உள்ள கோடுகள் ,பூவேளைப்படுகள் அதன் வனைவு
தொழில்நுட்பம் போன்றவை இடைக்கால பண்பாட்டுத் தாக்கத்தோடு உள்ளது. இந்த பழையப்பட்டினத்தில் பெருங்கற்காலம் தொட்டு கி.பி. 13 ஆம் நூற்றாண்டுவரை மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதை இங்கு நடைபெற்றுள்ள ஆய்வு உறுதிபடுத்துகிறது. மேலும் இவ்வூரில் தொடர்ந்து களஆய்வு நடைபெற்று வருவதாக உதவிப்பேராசிரியர் முனைவர் சிவராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
Comments
Post a Comment