அண்ணாமலைப் பல்கலைக் கழக வரலாற்றுத்துறை கண்டுபிடிப்பு

       சிதம்பரத்தில் சோழர் கால மழை நீர் சேகரிப்பு நிலவரை கால்வாய் கண்டுபிடிப்பு

         உதவிப்பேராசிரியர் J.R.சிவராமகிருஷ்ணன்

                         வரலாற்றுத்துறை
          
 சிதம்பரம் நடராஜர் கோயிலில் மழைக் காலங்களில் ஏற்படும் அதிகப்படி யான உபரி நீரினை வெளி ஏற்றுவதற்காக கி.பி. 10 -12 ஆம் நூற்றாண்டில் பூமிக்கடியில் கால்வாய் அமைத்து சுமார் 1250 மீட்டர் தூரத்துக்கு அப்பால் நீரினை கொண்டு சென்று அதை வினாக்காமல் குளத்தில் சேகரித்து நிலத் தடி நீர் மட்டத்தை பாதுகாத்துள்ளனர்.

கால்வாய் அமைப்பு

  சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள  யானைக்கால் மண்டபத்தின் மேற்கு பகுதியில் இருந்து  நிலவரை கால்வாய் வழியாக மழை காலங் களில் ஏற்படும் உபரிநிரினை  கோயிலின் நேர் வடக்கே அமைந்துள்ள காளிக்கோயில்  சிவப்பிரியை குளத்தை சென்றடையும் வண்ணம் நிலவரை கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இக் கால்வாயினை சிதம்பரம் அண்ணா மலைப் பல்கலைக் கழக வரலாற்றுத்துறையை சார்ந்த தொல்லியல் ஆய்வாளர்

உதவிப் பேராசிரியர் J.R.சிவராமகிருஷ்ணன் மற்றும் ஆய்வு மாணவர்கள் சுசேந்திரன் ,ராஜராஜன், பிரபாகரன் ஆகியோர் கொண்ட குழு ஆய்வு செய் தது. சுமார்  1250 மீட்டர் நீளம் கொண்ட இக் கால்வாய் ஆனது நிலமட் டத்தில் இருந்து 119 செ.மீ ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இக் கால்வா யின் உள் அளவு – உயரம் 77 செ.மீ, அகலம் 63 செ.மீ. ஆகும் .இக் கட்ட மைப்புக்கு நன்கு அரைக்கப்பட்ட களிமண்ணை கொண்டு உருவாக்கப்பட்ட சுட்ட செங்கற்களை பயன்படுத்தி உள்ளனர். இவைகள் 24X15X5 செ. மீ. நீள , அகலங்களை கொண்டதாகும் . அதாவது 1 : 3 : 6 என்ற சரியான அளவில் உருவாக்கப்பட்ட செங்கற்கள் இந்த  கட்டுமானத்திற்கு அக்காலத்தில் பயன் படுத்தி உள்ளனர் . குறிப்பாக செங்கற்களை இணைக்க சுண்ணாம்பு சாந்து பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 2 அடி அகலம் 5 அடி நீளம் பெரிய கருங் கல் பலகைகளை கொண்டு கால்வாயின் மேல்பகுதி மூடப்பட்டுள்ளது .

காலம்

  இந்த கால்வாயின் கட்டுமான அமைப்பும் அதன் தொழில்நுட்பதையும்  பார்க்கும் போது பிற்கால சோழர்கள் காலத்தில்  அதாவது கி.பி. 10 – 12 நூற்றாண்டில் இக்கால்வாய் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.இதன் மூலம் பண்டையகால சோழ மன்னர்கள்  மழை நீர் சேகரிப்பு திட்டத்திற்கு அவர் கள் கொடுத்த மகத்தான ஆதரவை அறியமுடிகிறது. இது போன்ற கால் வாய் அமைக்கும் திட்டம் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பு சிந்து சமவெளி நாகரிக மக்கள் பயன்படுத்தி உள்ளனர். ஆனால் தமிழர்களும் அது போன்ற தொழில்நுட்பதை பயன்படுத்தி உள்ளனர் என்பதற்கு இது சான்றாக அமைந் துள்ளது.


Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

கல்வெட்டில் குற்றம், தண்டனை, தீர்வு