அண்ணாமலைப் பல்கலைக் கழக வரலாற்றுத்துறை
கடலூரும் காந்தியும்
முனைவர் J.R.சிவராமகிருஷ்ணன் ,
வரலாற்றுத்துறை,
அண்ணாமலைப் பல்கலைக் கழகம்.
இந்த உலகில் எத்தனையோ மாமனிதர்கள்
தோன்றி இருப்பினும் அதில் ஒரு சிலர் தான்
உலக வரலாற்றையே புரட்டிப்போடும் அளவிற்கு வல் லமை பெற்றிருந்தனர். அந்த வரிசையில்
நம் நாட்டில் தோன்றிய அந்த அற்புத மனிதர் 350
ஆண்டுகள் நாம் அன்னிய நாட்டினரிடம்.
விலங்கை விட கேவலமாக அடிமை பட்டிருந்த போது அந்த அடிமை விலங்கை எந்த
வித இரும்பு ஆயுதமும் இன்றி அகிம்சை என்ற ஒரே ஆயுத்தால் தகர்த் தெரிந்த பெருமை மகாத்மா காந்தியையே சாரும். பத்தொன்பதாம் நூற் றாண்டின்
முற்பகுதியில் தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா வந்த காந்திமகான் சிலகாலம்
இந்திய சுதந்திர போராட்டத்தின் போக்கை உற்று கவனித்தப் பிறகு சரியான சந்தர்பத்தில் தாம்
தென்னாப்பிரிக்காவில் கற்ற போராட்ட படிப்பினையை இந்திய சுதந்திர போராட்டத்தில்
விதைத்தார். விளைவு அற்புத சுதந்திரத்தை நாம் பெற்றோம். அந்த உத்தமர் பிறந்த
இந் நாளில் கடலூர் மாவட்டத்தில் அவர்தடம் பதித்த சுவடுகளின் பக்கங்களை சற்று
புரட்டிப்பார்போம்.
பறங்கிப்பேட்டை
கடலூர் மாவட்டதிற்கு 17. 09 .1921 அன்று காந்திஜி விழுப் புரம் , பண்ருட்டி ,
கடலூர் வழியாக பறங்கிப்பேட்டை ரயில் நிலையத்தில் தமது திருப்பாதங்களை பதித்தார் . காரணம்
பறங்கிப் பேட்டையில் கல்வி சேவைக்காக சேவா சதனத்தை நிறுவிய டச்சு நாட்டை சார்ந்த திருமதி
அன்னை மேரி பீட்டர்சன் என்ற அம்மையார் அவர்கள்
காந்திஜியின் மீது கரைகாண பக்தி கொண்டவர். அவ் அம்மையாரின் அழைப்புக்கு இனங்கிய காந்தி
பறங்கிப்பேட்டைக்கு வருகை புரிந்து மேரி அவர்கள் துவக்க உள்ள கிருத்துவ தேசிய கலா சாலைக் கட்டடத்தின்
அடித்தள கல்லை நாட்டினார். பிறகு அங்கிருந்து மாலை சுமார் ஆறு மணிக்கு கடலூரில்
நடைபெற இருந்த பொதுக்கூட்டதிற்கு வருவதாக திட்டம் ஆனால் கூடியிருந்த மக்கள் கடலை
கடந்து வருவதற்குள் மணி இரவு எட்டாகிவிட்டது.
கடலூரில் காந்தி
கடலூரில் கெடிலநதிக்கரையில் கூடியிருந்த மக்கள் வெள்ளத்தில் அரை மணி நேரம்
பேசிய அண்ணலின் பேச்சை எம்.கே.ஆச்சார்யா தமிழில் மொழி பெயர்த்தார்.இக்
கூட்டத்திற்கு எஸ்.சீனிவாச ஐயங்கார் அவர்கள் தலைமை வகித்தார்.மேலும் கடலூரை
சார்ந்த அசலாம்பிகை அம்மையார் அவர்கள் பெண்கள் சார்பாக தமது வரவேற்புரையை
காந்திக்கு படித்து வழ்ங்கினார்.’’ சுயராஜ்யம் ‘’ என்ற சொல்லுக்கு வேறு பொருள்
இருக்கிறதோ இல்லையோ கட்டுப்பாடு என்ற பொருள் உறுதியாக உண்டு என்பதை கடலூர் மண்ணில்
முதன் முதலாக காந்திஜி அவர்கள் வலியுருத்தினார் அந்த சிறப்பு கடலூ ருக்கு மட்டுமே
உண்டு.
இரண்டாவது முறை கடலூர் வருகை
1927 செப்டம்பர் திங்கள் 10 ஆம் நாள் அதிகாலை 3.30 மணிக்கு திருவனந் தபுரம் எக்ஸ்பிரசில் காந்தி கடலூர்
வந்தடைந்தார். அதிகாலை வேலையாக இருந்ததால்
வந்தபெட்டியிலேயே அவர் தூங்குவதற்கு ரயில்நிலைய அதிகா ரிகள் வசதி செய்து
கொடுத்தனர்.இந்த செய்தியை கேள்வி பட்ட மக்கள் காந்திஜியை காண ரயில் நிலையதில்
திரண்டு இருந்தனர். காலை ஆறு மணிக்கு கடலூர் நகராட்சி மன்ற தலைவர் வேணுகோபால
நாயுடுவும் நகர் மன்ற உறுப்பினர்ககள்
மற்றும் போது மக்களும் அண்ணலுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். மீண்டு
காந்திஜியின் திருப் பாதங்கள் இரண்டாவது முறையாக கடலூர் மண்ணில் பதிந்த பெருமை இந்
நகர் பெற்றது. மேலும் அன்று கலெக்டர் அலுவலக மைதானத்தில் நடைபெற்ற போதுக்
கூட்டத்தில் காந்திஜிக்கு கடலூர் வழக்கரிஞர்கள் சங்கம் மற்றும் சுயராஜியக் கட்சியின்
சார்பாக சீனிவாசஐயங்காரும், திண்டிவனம் பொதுமக்கள் சார்பாக வெங்கட் ராம
ரெட்டியாரும், கடலூருக்கு வந்திருந்த பொதுமக்கள் சார்பாக A.V.பாஷி யம் ரெட்டியாரும்
வரவேற்புரையும் பணமுடிப்பையும் அளித்தார்கள். இக் கூட்ட மேடையில் கடலூர் மாவட்ட
பெண்கள் சார்பாக அசலாம்பிகை அம்மாள் பணமுடிப்பையும் வரவேற்புரையும் காந்திஜிக்கு
வழங்கினார்கள்.
இந்த பொதுக்கூட்ட மேடைக்கு வருவதற்கு முன்பாக வழியில் நான் ஒரு வாசகத்தைப் பார்த்தேன். அந்த
வாசகத்தை நீங்களும் பின்பற்றினால் போதுமானது. அதாவது ‘’ஏழைகளை நேசியுங்கள்;
நீங்கள் காந்திஜியை நேசித்தவர்களாவீர்கள்’’ என கூறியது போது மக்களிடையே பெரும்
வர வேற்பை பெற்றது. அன்றே நெல்லிக்குப்பம் பொதுக்கூட்டதில் பேச வேண் டிய சூழல்
காந்திக்கு ஆனால் உடல் நிலையை கருத்தில் கொண்டு தமது மனைவி கஸ்தூரிபாயை
அனுப்பிவைத்தார்.
சிதம்பரத்தில்
காந்தி
மகாத்மா காந்தி அவர்கள்
சிதம்பரம் நகருக்கு இருமுறை வந்துள்ளார் கள்(1927-1934). ஆனால் 16. 2. 1934
ல் சிதம்பரம் நகருக்கு காந்தி அவர்கள் வந்ததற்கு காரணம் நந்தனார் பேரில் அவருக்கு இருந்த
அசைக்க முடியாத பற்று. மேலும் அன்றுதான் சுவாமி சகஜானந்தா தலைமையில் நடைபெற்ற
நந்தனார் கோயில் கட்டுவதற்கான அடித்தளக்கல் நாட்டப்பட்டதாகும்.மேலும் அன்று நடைபெற்ற பொதுக்கூட்டதில் காந்தி அவர்கள் நந்தனாரைப் பற்றி
கூறும் போது ‘’ யங் இந்தியா ‘’ வில் சிதம்பர நகரையும் நந்தனாரையும் பற்றி ராஜாஜி
எழுதிய கட்டுரை தம்மை மிகவும் கவர்ந்தது. அதனால் தான் நந்தனின் திருப்பாதங்கள்
பட்ட இந்த புன்னிய பூமியில் எனது பாதங்கள் படுவதை நான் பெருமையாக கருதுகிறேன்
என்று காந்திஜி குறிப்பிட்டது நந்தனார்பால் காந்திக்கு இருந்த அன்பினை நாம்
அறியமுடிகிறது.
இந்தியாவில் தமது காலனி ஆதிக்கத்தை நிறுவிய ஆங்கிலேய கிழக்கிந் திய
கம்பெனியின் முதல் தலைநகராக விளங்கிய பெருமை
கடலூருக்கு உண்டு. இந்த மாவட்ட பகுதிக்கு காந்தி அவர்கள் வருகை புரிந்ததன்
மூலம் இம் மாவட்ட மக்களுக்கு ஒரு புதிய உத்வேகத்தை அளித்தது என்றால் அது
மிகையன்று.
அருமையான பதிவு. இதன் மூலம் அரிய தவல்களை அறிய முடிந்தது.
ReplyDelete