அண்ணாமலைப் பல்கலைக் கழக வரலாற்றுத்துறை கண்டுபிடிப்பு
முதுமக்கள் தாழி கடலூர் அருகே கண்டுபிடிப்பு
முனைவர் J.R.சிவராமகிருஷ்ணன்
வரலாற்றுத்துறை
அண்ணாமலைப் பல்கலைக் கழகம்.
கடலூர் அருகே உள்ள குமாரப்பேட்டையில் பன்னீர்செல்வம் என்ற விவ சாயி தமது நிலத்தை கனரக எந்திரம்
மூலம் சீர்
செய்யும் போது இரண் டடி ஆழத்தில் சுமார் 2300 ஆண்டுகள் பழமை வாய்ந்த முதுமக்கள்
தாழி
கிடைத்துள்ளது. உடனே சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக வர லாற்றுத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதன்
விளைவாக அத்துறையை சார்ந்த தொல்லியல் ஆய்வாளர் முனைவர் ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன், முனைவர் கலைச்செல்வன் மற்றும் ஆய்வு மாணவர்கள் அங்கு சென்று ஆய்வு செய்தனர்.
முதுமக்கள் தாழி
கிடைக்கப்பட்ட சிதைந்த தாழியானது 100 செ.மீ. உயரம் , 60 செ .மீ. அகலம் கொண்டதாகும். மேலும் உடைந்த தாழியை சுற்று பகுதியில்
முற் றிலும் துருப்பிடித்த இரும்பு ஆயுதத்தின் துண்டுகள் , மனித எலும்பு துண்டுகள் மற்றும் உடைந்த கருப்பு சிவப்பு மட்கலன்களின் பாகங்கள்
காணப்பட்டன. இவைகள் அனைத்துமே இப் பகுதியில் சுமார் 2300 ஆண்டுக ளுக்கு முன்பு வாழ்ந்த இரும்புக்கால மக்கள் தங்களில் இறந்தவர்களை புதைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டதே இந்த முதுமக்கள் தாழியாகும்.
மக்கள் வாழ்விடப் பகுதி
முதுமக்கள் தாழி கண்டறியப்பட்ட இடத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரம் நேர் மேற்கு
பகுதியில் மேற்கள ஆய்வு செய்த போது மண்ணின் மேற்பரப்பில் உடைந்த கருப்பு மற்றும் சிவப்பு நிற மட்கல ஓடுகளும் , செங்காவி பூசப்பட்ட மட்கல ஓடுகளும் வெளிறிய சம்பல் நிற
ரெளல டட் வகை மட்கல ஓடுகளும் உடைந்த செங்கற் துண்டுகளும் சேகரிக்கப் பட்டுள்ளன .
மேலும் இதே
பகுதியில்
இரும்பு
கசடுகள் காணப்டுவதால் இங்கு வாழ்ந்த மக்கள் மண்ணில் இருந்து இரும்பை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை தெரிந்திருந்தனர் என்பதை அறியமுடிகிறது.
அழகிய மட்பாண்டக் கலை
முற்றிலும் சிதைந்த முதுமக்கள் தாழி
பகுதியில் கிடைத்துள்ள உடைந்த கருப்பு சிவப்பு நிற மட்கலங்களில் ஒன்று விளிம்பு இல்லாமல் கழுத்து
நீண்டும். 20 செ.மீ. உயரம் கொண்ட இதே வடிவிலான மட்கலன் இதுவரை கடலூர் மாவட்டத்தில் கண்டறியப்பட்டவில்லை எனலாம். மேலும்
இதே போன்ற
வடிவத்தை
உடைய
நீண்ட
கழுத்தை கொண்ட குவளையனது புகழ் பெற்ற ஆதிச்ச நல்லூர் மற்றும் தமிழக பிற இடங்களில் நடைபெற் றுள்ள
அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதா கும். மேலும் இப் பகுதியில் மண்ணின் மேற்பரப்பில் கிடைக்கப்பட்டுள்ள
கருப்பு சிவப்பு நிற மட்கல ஓடுகளை இங்கு வாழ்ந்த மக்கள் இதே பகுதி யில் கிடைக்ககூடிய சிவப்பு நிற மண்ணை கொண்டு தங்களுக்கு தேவை யான மட்பாண்டங்களை செய்து
கொண்டனரா அல்லது வெளியில் இருந்து கொண்டுவந்த மண்ணில் தயாரித்து கொண்டனரா என்பது குறித்த ஆய்வு நடைபெற்று வருவதாக உதவிப் பேராசிரியர் முனை வர் சிவராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
படம் 1.சிதைந்த முதுமக்கள் தாழி.
படம் 2.
உடைந்த கருப்பு சிவப்பு நிற மட்கலங்கள்.
Comments
Post a Comment