Posts

Showing posts from June, 2023

வேதங்களில் ஸ்தூபங்கள்

Image
  வேதங்களில் ஸ்தூபங்கள் பொதுவாக ஸ்தூபம் என்பது பௌத்தரோடு  தெடர்புடையதாகவே நோக்கப்படுகின்றது. ஆனால் ரிக்வேதம் தொடங்கி ஸ்தூபம் குறிப்பிப்படுவதை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ரிக்வேதத்தில் ஆப்ரிஸூக்தம் உப ஸ்ப்ருʼஶ தி³வ்யம்ʼ ஸானு ஸ்தூபை꞉ என்று அக்னியின் ஸ்தூபம் வானைத் தொடுவதாகக் குறிப்பிடுகிறது. தைத்திரீய ஸம்ஹிதை விஷ்ணோ: ஸ்தூபோஸி என்று விஷ்ணுவின் ஸ்தூபத்தைக் குறிப்பிடுகிறது. வேதகால அக்னியே புராண கால சிவபெருமான் என்பதால் சிவபெருமானுக்கும் விஷ்ணுவிற்கும் ஸ்தூபங்கள் வேதகாலத்தில் இருந்திருக்கலாம் என்று கருதுகின்றனர்.  ஸ்தூபம் என்பது குவிக்கப் பெற்ற பொருளைக் குறிக்கும். மண் முதலிய பொருட்களைக் குவித்து ஸ்தூபமாக கருதியிருக்கலாம் என்று கொள்ள வாய்ப்பிருக்கிறது.

மாடமாளிகை கூடகோபுரம்

Image
  மாடமாளிகை கூடகோபுரம் மாடம் என்னும் சொல் வடமொழியில் உயர்வுமிகுந்த கட்டிடத்தைக் குறிக்கும். ராஜக்ருஹ மாடங்கள் என்னும் அரசர் தம் வீட்டு மாடங்களின் இலக்கணங்கள் அபராஜிதப்ருச்சா முதலிய சிற்பநூல்களில் காணப்பெறுகின்றன. இருபத்தாறு வகையான அரசர்தம் மாடங்களின் இலக்கணம் உள்ளது. மாலிகா என்பது கட்டிடத்தை மாலை போல் சுற்றமைந்த சுற்றாலை. திருச்சுற்று மாளிகை என்று தமிழில் வழங்குகிறது. கூடம் என்பது குவிந்த கூரை. கர்ணகூடம் முதலியவற்றில் பயின்று வருவது . தமிழில் கூடம் ஒன்பது வேறு பொருளில் அமைந்தது. மாடமாலிகா கூடகோபுரம் என்பது வடசொல். ஆயினும் மாடம் என்னும சொல் புரை போன்ற சுவர்க்குழிக்கும் தமிழில் பயின்றே வந்துள்ளது.  மாடமாளிகை கோபுரங் கூடங்கள் என்பது தேவார வரி. இன்னும் சீவகசிந்தாமணி முதலிய நூல்களும் மாடத்தை உபரிகையுள்ள வீடு என்றே குறிப்பிடுகின்றன.  தூங்கானை மாடத்தையும் மாடாகார விமானம் என்று குறிப்பிடுகின்றனர். இதற்கு மூலம் பார்க்க வேண்டும்.

வித்யாரண்யபுரம்

Image
  வித்யாரண்யபுரம் விஜயநகர ஸாம்ராஜ்யம் உருவாக அருளாணை பிறப்பித்தவர் வித்யாரண்ய ஸ்வாமிகள் என்பது விஜயநகர வேந்தர்களின் சாஸனங்களிலிருந்து தெளிவாகிறது. அவருடைய பெயரால் ஓரூர் தமிழகத்தில் இருந்தமை கல்வெட்டுக்களால் புலனாகிறது. திட்டக்குடி பாண்டியர் காலம் வரை திருச்சிற்றம்பல சதுர்வேதி மங்கலம் என்று வழங்கப்பெற்றது. விஜயநகர கல்வெட்டுக்களில் வித்யாரண்யபுரமான திட்டக்குடி என்றே வழங்கப்பெற்றது. இதைப்போலவே காஞ்சி காமகோடி பீடத்திற்குரியதாய் செப்பேடு குறிப்பிடும் குடியாந்தண்டலம் அருகிலுள்ள சுருட்டில் சங்கராசார்யபுரம் என்றே வழங்கப்பட்டது காஞ்சி வரதராஜர் கோயில் கல்வெட்டால் தெரியவருகிறது.

வெட்சிப்போரில் ஈடுபட்ட சுருதிமான்கள்

Image
 வெட்சிப்போரில் ஈடுபட்ட சுருதிமான்கள்     கி.பி.1007ல் சோழன் முதலாம் ராஜேந்திரனுக்கும் மேலைச்சாளுக்கியருக்கும்  நடந்த போரில் ராஜேந்திர சோழரின் யானைப் படையை தலைமை ஏற்று நடத்தியவர்சுருதிமான் நக்கன் சந்திரன் ஆவார்.இந்த படைத்தலைவன் நினை வாக ராஜேந்திர சோழன் ஊட்டத்தூர் கோவிலுக்கு நிவந்தம் அளித்தார்.  சுருதிமான்கள் போர்ப்படைத் தளபதியாக,அதிகாரிகளாக,குறுநில மன்னர்களாக,இருந்தமைக்கு அநேக சான்றுகள் உண்டு.ஊட்டத்தூர் என்பது திருச்சிக்கு அருகில் உள்ளது, இவ்வூட்டத்தூரிற்கு மிக அருகேயுள்ள பகுதி பாடலூர். இப்பகுதியில் சுருதிமான்கள் எனும் குடியினர் அதிகமாய் இருந்ததற்கு இந்நடுகல்லும் ஒரு சான்று. வலக்கையை மடித்தபடி இடக்கையில் வாளுடன் கூடிய வீரனின் புடைப்புச்சிற்பம் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அக்கல்தூணின் நான்கு புறங்களிலும் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. 1. ஸ்வஸ்தீ ஸ்ரீ மதிரை கொண்ட கோப்பரகேசரி பர்மருக்கி யாண்டு ஙயரு 2. ஆவது இவ்வாண்டு, மியமானாட்டு 3. வள்ளுவப்பாடி விரியூர், ஆட்டை ஊற்றத்தூர் நாட்டுப் பாடாவூர் ரெஞ்சுருனிமான்கள் நிரை கொண்டுபோக,நிரைப்பின்பு சென்று, ஆடு ஈடு கொண்டுபட்ட நாக...

தமிழகத்தில் மீமாம்ஸை

Image
  தமிழகத்தில் மீமாம்ஸை         வேதத்தை ஒட்டிய ஆறு மதங்கள்‌ ஆஸ்திக தர்சனங்கள் எனப்பெறுகின்றன. இவற்றுள் ஒன்று மீமாம்ஸா. வேதப்பொருள் கூற பல்வேறு யுக்திகளைக் கொண்டு திகழும் மதம். இதற்குப் பூர்வமீமாம்ஸா என்ற பெயரும் உண்டு. இதன் ஸூத்ரங்களை ஜைமினி எழுதினார். பிறகு இது ப்ரபாகரர் குமாரிலர் ஆகிய குரு சிஷ்யர்களின் பெயரால் ப்ராபாகர மீமாம்ஸை என்றும் பாட்ட மீமாம்ஸை என்றும் இரண்டாகக் கிளைத்தது. முதலாம் பராந்தக சோழனின் திருநாகேச்வரத்துக் கல்வெட்டும் ராஜராஜனின் எண்ணாயிரக் கல்வெட்டும் ப்ராபாகர மீமாம்ஸை மட்டுமே பாடத்தில் இருந்தமையைக் குறிப்பிடுகின்றன. பாட்ட மீமாம்ஸை ஏனோ தமிழகக் கல்வெட்டுக்களில் பயன்பாட்டிலிருந்ததாகக் கிடைக்கவில்லை. மேலும் ராஜராஜன் காலத்தில் 20 காண்டங்களோடு மீமாம்ஸை பயின்ற செய்தி கிடைக்கிறது. இன்று இரண்டு மீமாம்ஸைகளோடு 16 காண்டங்கள் உள்ளன. இதோடு ஸங்கர்ஷண காண்டங்கள் நான்கு என்று கொண்டு 20 காண்டங்கள் எனக்கூறுவர்.எது எப்படியோ பத்தாம் நூற்றாண்டில் ப்ராபாகர மீமாம்ஸை மட்டுமே தமிழகத்தில் பாடத்திட்டத்தில் இருந்தது.

DrJ.R.SIVARAMAKRISHNAN

Image
 

வெண்பாவூர் சித்திரமேழி கல்வெட்டு

Image
 பெரம்பலூர் மாவட்டம் வெண்பாவூர் சித்திரமேழி கல்வெட்டு 1. ஸ்வஸ்திஸ்ரீ சித்தி 2. ர மேழி மலை மண்டல 3. த் தேசி விண்ணகர்  4. தாயிலு நல்ல பெ 5. ருமாள். இந்த தாயினும் நல்ல பெருமாள் பெயரில் ஆறகளூரில் ஒரு சிவன் கோயில் உள்ளது.தற்போது அது சோழீஸ்வரன் கோயில் என அழைக்கப்பட்டு வருகிறது. ஆறகளூரை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த பொன்பரப்பின வாணகோவரையனின் ஒரு பட்டப்பெயர் தாயினும் நல்ல பெருமாளாக இருக்ககூடும்.   வெண்பாவூர் மகதைமண்டலத்தில் இருந்த ஒரு ஊராகவும், வணிகநகரமாகவும் விளங்கியது குறிப்பிடதக்கது.

இராமாயணச் சுடுமண் பலகைகள்

Image
  ராமாயணச் சுடுமண் பலகைகள் ஹர்யாணாவிலுள்ள ஜஜ்ஜார் அருங்காட்சியகத்தில் ராமாயணக் காட்சிகள் சுடுமண்ணாலான பலகைகளில் காணப்படுகின்றன. அவற்றில் நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த ப்ராஹ்மி எழுத்துப் பொறிப்பும் காணப்படுகிறது. இவை வால்மீகி ராமாயணத்தில் இருந்து எடுத்தாளப்பட்ட செய்யுட்பகுதிகளாக உள்ளன. எடுத்துக்காட்டாக ஜடாயுவுடனான கற்பலகையில் अन्तरा  रघुनन्दनः। आससाद महागृध्रम् அந்தரா ரகு⁴நந்த³ன꞉. ஆஸ்ஸாத³ மஹாக்³ருத்⁴ரம் என்னும் பொறிப்பு இடம்பெற்றுள்ளது. இது ஆரண்ய காண்டத்தில் 14 ஆம் ஸர்க்கத்தில் இடம்பெற்ற செய்யுட்பகுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இதைப் போலவே அசோகவாடிகையில் ஹனுமான் முதலிய காட்சிகளும் பொறிப்புக்களோடு இடம்பெற்றுள்ளன.

கொடை கொடுத்த கூத்தியர்

Image
  கொடை கொடுத்த கூத்தியர் கோயில்களில் கூத்தியராக இருந்த பலரும் தாம் ஈட்டிய செல்வம் கொண்டு பிற கோயில்களுக்கும் கொடை அளித்த செய்தி கல்வெட்டுக்கள் வாயிலாகத் தெளிவாகிறது. நான்குநேரியில் மூன்றுயுகம் கண்டாள் என்று வழங்கப்படும் கோயிலை 13ஆம் நூற்றாண்டில் திருவானைக்காவல் கோயிலின் சாந்திக்கூத்தியான உலகமுழுதுடையாள் ஜகதிப்படை முதலானவற்றோடு வடவாயில் செல்வியாக எடுப்பித்த செய்தி பதிவாகியுள்ளது. இதனைப் போலவே மதுரைக் கோயிலின் தலைக்கோலியான ராஜ புஜங்க த்ராஸித (ஆஹா கரணத்தின் பெயரில் தலைக்கோலி) திருநெல்வேலியில் நெல்லையப்பருக்கு வழங்கிய கொடை கல்வெட்டில் பதிவாகியுள்ளது. இவ்விதமே தூரத்திலுள்ள கோயில்களிலும் பிற கோயில்களின் கூத்தியர் கொடுத்த கொடைகள் பதிவாகியுள்ளன. பதிமூன்றாம் நூற்றாண்டில் இவ்விதம் காணப்பெறும் இத்தகைய கூத்துமகளிரின் கல்வெட்டுகள் 14 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு அருகுகின்றன. மாலிக்காஃபூர் படையெடுப்பு இதற்கு காரணமாகலாம்.

துலுக்கவாணத்தில் சரிந்து

Image
  துலுக்கவாணத்தில் சரிந்து கொழிஞ்சிபாடியில் துலுக்கவாணத்தில் கோயில் இடிந்துபட்டமை கண்டு மன்றாடியார் புதுப்பித்த செய்தியைப் பார்த்தோம். காளையார் கோயிலில் உள்ள் அம்மன் ஸந்நிதியிலுள்ள கல்வெட்டு ஒன்றும் காளையார் கோயில் மடைப்பள்ளி துலுக்கவாணத்தில் நான்கு புறமும் சரிய 1521-இல் தர்மபரிபாலனார் என்பவர் மீண்டும் கட்டிக்கொடுத்த செய்தியைத்தருகிறது.

பண்டைய நெடுஞ்சாலை

Image
  பண்டைய நெடுஞ்சாலை பொயுமு 5 ஐச் சேர்ந்த பாணினி உத்தராபதம் என்று ஒரு நெடுஞ்சாலையைக் குறிப்பிடுகிறார். இது தக்ஷசிலாவிலிருந்து பிஹாரின் ராஜக்ருஹம் வரை அங்கிருந்து பாடலிபுத்ரம் வரையிலும் இருந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இடையில் இந்த்ரப்ரஸ்தம் அதாவது தில்லி, கௌசாம்பி மற்றும் வாராணாஸியுமுண்டு. அங்கிருந்து காந்தாரம் அதாவது ஆப்கானிஸ்தான் வரையிலும் நீண்டிருந்ததாகவும் கருதுகின்றனர். மற்றொரு சாலை ராஜகிரில் இருந்து ஆந்திரம் வரை பொயுமு ஐந்தில் இருந்ததையும் அறிஞர்கள் காட்டுகின்றனர்.

தொழுதூர் கல்வெட்டு

Image
  தொழுதூர் கல்வெட்டு ............. ................ ஆற்றங்கரையில் திருவி ளக்குபுறம் தெங்கந் தோ ட்டம் இருமாவரையும் கறி அமுதுக்கு புஞ்சி நிலம் இரண் டு மாவும் இதந் கிழக்கு நிலம் இரண்டு மாவும் மதுராந்தகசோ ..ரமுடையாற்கு ஆக நன்செய் நிலம் ௩இ வேலியும் அரைசந்துறை நாயநாற்கு சை ..வசிகாமணி உள்பட நசெநிலம் ௧ வே லி சிறுதொழுவூரில் நசெய் ௪ மாவும்..புஞ்செ ய் ௧ வேலியும் தெங்கந் திருநந்தவாநத் துக்கு கீழ்பாதி நிலம் ஒரு மாவரை யும் சிறுகழியில்..... நாயனாற்கு நிலம்.... ற்க்கு தெற்க்கும் கழநி நடுவில் ஓடைக். ..செய் நிலம் ஒரு வேலியும் இத.. ..ற்கு ஆற்றங்கரை திருச்சாந்தா ட .. புஞ்சி நிலம் ஆறு மா அலர் நிலம் அம ... ஒரு"

ஹிதுஷ் - ஹிந்து

Image
  ஹிதுஷ் - ஹிந்து பொயுமு ஆறாம் நூற்றாண்டில் முதலாம் டாரியஸ் இந்தியாவின் வடமேற்கு பகுதியை அதாவது இன்றைய பாகிஸ்தான் வரை கைப்பற்றியிருந்தான். அவனுடைய கல்வெட்டு அவன் வெற்றி கொண்ட இடங்களை காந்தாரம் ஹிதுவிஷ் - ஹிந்து அதாவது ஸிந்து பகுதி என்று குறிப்பிடுகிறது. இந்தக் கல்வெட்டும் தங்கத்தாலான பொறிப்புத்தகடும் தான் ஹிந்து இந்தியா முதலிய பெயர் வரக் காரணம். கல்வெட்டில் மேலே இருப்பது டாரியஸின் வடிவம்.

பாண்டியகுலாந்தகப் பெருந்தெரு

Image
  கங்கை கொண்ட சோழபுரத்தில் பாண்டியகுலாந்தகப் பெருந்தெரு - காஞ்சிக் கல்வெட்டு ஒரு ஊரைப் பற்றிய வரலாறு அந்த ஊர் கல்வெட்டுகளைப் பற்றி மட்டுமே அறிந்தால் முடிவு செய்ய முடியாது. மற்ற ஊர் கல்வெட்டுகளிலும் அவ்வூரைப் பற்றிய குறிப்புகள் இருக்கும். இங்கே பாருங்கள். கச்சி வரதராஜர் ஆலயத்துக் கல்வெட்டு. கங்கை கொண்ட சோழபுரத்தில் பாண்டியகுலாந்தகப் பெருந்தெருவில் இருக்கும் வெண்கல வாணிகன் புற்றிடம் கொண்டான் என்பவன் கொடுத்த கொடையைக் குறிப்பிடுகிறது. கங்கைகொண்ட சோழபுரத்தில் இப்படி ஒரு பெருந்தெரு இருந்தமை இதனால் தெரியவருகிறது.

இதிஹாஸங்களில் முசிறி

Image
  இதிஹாஸங்களில் முசிறி வளங்கெழு முசிறி என்று வழங்கப்படும் முசிறி வடமொழி இதிஹாஸங்கள் இரண்டிலும் இடம்பெற்றுள்ளது. முரசீ பத்தனம் என்ற பெயரில் இதிஹாஸங்கள் குறிப்பிடுகின்றன. வால்மீகி ராமாயணத்தில் ஸுக்ரீவன் வானரங்களை ஸீதையைத் தேடச்சொல்லி பணிக்கும் போது தென்னகத்து கடற்கரைப் பட்டணங்களைப் பட்டியலிடுகிறான். அப்போது முரசீபத்தனம்ʼ சைவ ரம்யம்ʼ சைவ ஜடீபுரம்॥4।42।13॥ என்று முரசீ பத்தனம் என்ற முசிறியைக் குறிப்பிடுகிறான். வ்யாஸ பாரதத்தின் ஸபா பர்வத்தில் ஸஹதேவன் வென்ற இடங்களில் தெற்கே முரசீ பத்தனத்தைக் குறிப்பிடுகிறான். க்ருʼத்ஸ்னம்ʼ கோல்லகி³ரிம்ʼ சைவ முரசீபத்தனம்ʼ ததா² 2।28।45 வராஹமிஹிரர் மரீசி பத்தனம் என்கிறார். மரீசி என்பது மிளகைக் குறிக்கும். கறியொடு பெயரும் என்ற சங்க இலக்கியக் குறிப்பைப் போல மிளகு பட்டணம் என்றே பெயர் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. Reply Forward

முனைவர் ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன்

Image
முனைவர்  ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன்