மாடமாளிகை கூடகோபுரம்
மாடமாளிகை கூடகோபுரம்
மாடம் என்னும் சொல் வடமொழியில் உயர்வுமிகுந்த கட்டிடத்தைக் குறிக்கும். ராஜக்ருஹ மாடங்கள் என்னும் அரசர் தம் வீட்டு மாடங்களின் இலக்கணங்கள் அபராஜிதப்ருச்சா முதலிய சிற்பநூல்களில் காணப்பெறுகின்றன. இருபத்தாறு வகையான அரசர்தம் மாடங்களின் இலக்கணம் உள்ளது. மாலிகா என்பது கட்டிடத்தை மாலை போல் சுற்றமைந்த சுற்றாலை. திருச்சுற்று மாளிகை என்று தமிழில் வழங்குகிறது. கூடம் என்பது குவிந்த கூரை. கர்ணகூடம் முதலியவற்றில் பயின்று வருவது . தமிழில் கூடம் ஒன்பது வேறு பொருளில் அமைந்தது.
மாடமாலிகா கூடகோபுரம் என்பது வடசொல். ஆயினும் மாடம் என்னும சொல் புரை போன்ற சுவர்க்குழிக்கும் தமிழில் பயின்றே வந்துள்ளது.
மாடமாளிகை கோபுரங் கூடங்கள்
என்பது தேவார வரி. இன்னும் சீவகசிந்தாமணி முதலிய நூல்களும் மாடத்தை உபரிகையுள்ள வீடு என்றே குறிப்பிடுகின்றன.
தூங்கானை மாடத்தையும் மாடாகார விமானம் என்று குறிப்பிடுகின்றனர். இதற்கு மூலம் பார்க்க வேண்டும்.
Comments
Post a Comment