இதிஹாஸங்களில் முசிறி

 இதிஹாஸங்களில் முசிறி




வளங்கெழு முசிறி என்று வழங்கப்படும் முசிறி வடமொழி இதிஹாஸங்கள் இரண்டிலும் இடம்பெற்றுள்ளது. முரசீ பத்தனம் என்ற பெயரில் இதிஹாஸங்கள் குறிப்பிடுகின்றன. வால்மீகி ராமாயணத்தில் ஸுக்ரீவன் வானரங்களை ஸீதையைத் தேடச்சொல்லி பணிக்கும் போது தென்னகத்து கடற்கரைப் பட்டணங்களைப் பட்டியலிடுகிறான். அப்போது

முரசீபத்தனம்ʼ சைவ ரம்யம்ʼ சைவ ஜடீபுரம்॥4।42।13॥

என்று முரசீ பத்தனம் என்ற முசிறியைக் குறிப்பிடுகிறான். வ்யாஸ பாரதத்தின் ஸபா பர்வத்தில் ஸஹதேவன் வென்ற இடங்களில் தெற்கே முரசீ பத்தனத்தைக் குறிப்பிடுகிறான்.

க்ருʼத்ஸ்னம்ʼ கோல்லகி³ரிம்ʼ சைவ முரசீபத்தனம்ʼ ததா² 2।28।45

வராஹமிஹிரர் மரீசி பத்தனம் என்கிறார். மரீசி என்பது மிளகைக் குறிக்கும். கறியொடு பெயரும் என்ற சங்க இலக்கியக் குறிப்பைப் போல மிளகு பட்டணம் என்றே பெயர் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

கல்வெட்டில் குற்றம், தண்டனை, தீர்வு