வித்யாரண்யபுரம்

 வித்யாரண்யபுரம்




விஜயநகர ஸாம்ராஜ்யம் உருவாக அருளாணை பிறப்பித்தவர் வித்யாரண்ய ஸ்வாமிகள் என்பது விஜயநகர வேந்தர்களின் சாஸனங்களிலிருந்து தெளிவாகிறது. அவருடைய பெயரால் ஓரூர் தமிழகத்தில் இருந்தமை கல்வெட்டுக்களால் புலனாகிறது. திட்டக்குடி பாண்டியர் காலம் வரை திருச்சிற்றம்பல சதுர்வேதி மங்கலம் என்று வழங்கப்பெற்றது. விஜயநகர கல்வெட்டுக்களில் வித்யாரண்யபுரமான திட்டக்குடி என்றே வழங்கப்பெற்றது.

இதைப்போலவே காஞ்சி காமகோடி பீடத்திற்குரியதாய் செப்பேடு குறிப்பிடும் குடியாந்தண்டலம் அருகிலுள்ள சுருட்டில் சங்கராசார்யபுரம் என்றே வழங்கப்பட்டது காஞ்சி வரதராஜர் கோயில் கல்வெட்டால் தெரியவருகிறது.

Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

கல்வெட்டில் குற்றம், தண்டனை, தீர்வு