வெட்சிப்போரில் ஈடுபட்ட சுருதிமான்கள்
வெட்சிப்போரில் ஈடுபட்ட சுருதிமான்கள்
கி.பி.1007ல் சோழன் முதலாம் ராஜேந்திரனுக்கும் மேலைச்சாளுக்கியருக்கும் நடந்த போரில் ராஜேந்திர சோழரின் யானைப் படையை தலைமை ஏற்று நடத்தியவர்சுருதிமான் நக்கன் சந்திரன் ஆவார்.இந்த படைத்தலைவன் நினை வாக ராஜேந்திர சோழன் ஊட்டத்தூர் கோவிலுக்கு நிவந்தம் அளித்தார்.
சுருதிமான்கள் போர்ப்படைத் தளபதியாக,அதிகாரிகளாக,குறுநில மன்னர்களாக,இருந்தமைக்கு அநேக சான்றுகள் உண்டு.ஊட்டத்தூர் என்பது திருச்சிக்கு அருகில் உள்ளது, இவ்வூட்டத்தூரிற்கு மிக அருகேயுள்ள பகுதி பாடலூர். இப்பகுதியில் சுருதிமான்கள் எனும் குடியினர் அதிகமாய் இருந்ததற்கு இந்நடுகல்லும் ஒரு சான்று. வலக்கையை மடித்தபடி இடக்கையில் வாளுடன் கூடிய வீரனின் புடைப்புச்சிற்பம் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அக்கல்தூணின் நான்கு புறங்களிலும் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன.
1. ஸ்வஸ்தீ ஸ்ரீ மதிரை கொண்ட கோப்பரகேசரி பர்மருக்கி யாண்டு ஙயரு
2. ஆவது இவ்வாண்டு, மியமானாட்டு
3. வள்ளுவப்பாடி விரியூர், ஆட்டை ஊற்றத்தூர் நாட்டுப் பாடாவூர் ரெஞ்சுருனிமான்கள் நிரை கொண்டுபோக,நிரைப்பின்பு சென்று, ஆடு ஈடு கொண்டுபட்ட நாகன் வீர
4. ன் மகளு(க்கு) ஓர்(ரோ)ரால், இறையிலி வைத்து குடுத்தோம் விரியூர் ஊராரோம்
“ மதிரை கொண்டான் என்ற மெய்கீர்த்தி பெற்ற முதலாம் பராந்தகச் சோழனின் 35 ஆம் ஆட்சியாண்டில் மியமாநாட்டு, வள்ளுவப்பாடி, விரியூர் என்ற ஊரைச்சார்ந்த பசு, ஆட்டுக் கூட்டங்களை ஊட்டத்தூர் நாட்டு பாடாலூர் என்ற ஊரைச் சேர்ந்த ஐஞ்சுருனிமான்கள் கொண்டு சென்றனர்.
பாடலூரிலிருந்து 33 கி.மீ பயணப்பட்டு கரட்டாம்பட்டியில் இருந்து ஆநிறைகூட்டதினை சுருதிமான்கள் குழு கவர்ந்து சென்றுள்ளது.
அந்தப் பசுக் கூட்டங்களைப் பின்தொடர்ந்து சென்று அவற்றைத் திரும்பக் கொண்டு வருவதில் வெற்றிபெற்ற நாகன் என்னும் வீரன் அப்போது நடந்த சண்டையில் வீர மரணம் அடைந்தான்.
நாகனின் மகளுக்கு விரியூர் மக்கள் ஏகமனதாக முடிவு செய்து வரி நீக்கப்பட்ட நிலத்தை கொடுத்த செய்தி இக்கல்வெட்டில் பதிவு செய்யப்ட்டுள்ளது
Comments
Post a Comment