பாண்டியகுலாந்தகப் பெருந்தெரு
கங்கை கொண்ட சோழபுரத்தில் பாண்டியகுலாந்தகப் பெருந்தெரு - காஞ்சிக் கல்வெட்டு
ஒரு ஊரைப் பற்றிய வரலாறு அந்த ஊர் கல்வெட்டுகளைப் பற்றி மட்டுமே அறிந்தால் முடிவு செய்ய முடியாது. மற்ற ஊர் கல்வெட்டுகளிலும் அவ்வூரைப் பற்றிய குறிப்புகள் இருக்கும். இங்கே பாருங்கள். கச்சி வரதராஜர் ஆலயத்துக் கல்வெட்டு. கங்கை கொண்ட சோழபுரத்தில் பாண்டியகுலாந்தகப் பெருந்தெருவில் இருக்கும் வெண்கல வாணிகன் புற்றிடம் கொண்டான் என்பவன் கொடுத்த கொடையைக் குறிப்பிடுகிறது. கங்கைகொண்ட சோழபுரத்தில் இப்படி ஒரு பெருந்தெரு இருந்தமை இதனால் தெரியவருகிறது.
Comments
Post a Comment