வேதங்களில் ஸ்தூபங்கள்

 வேதங்களில் ஸ்தூபங்கள்







பொதுவாக ஸ்தூபம் என்பது பௌத்தரோடு  தெடர்புடையதாகவே நோக்கப்படுகின்றது. ஆனால் ரிக்வேதம் தொடங்கி ஸ்தூபம் குறிப்பிப்படுவதை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ரிக்வேதத்தில் ஆப்ரிஸூக்தம்

உப ஸ்ப்ருʼஶ தி³வ்யம்ʼ ஸானு ஸ்தூபை꞉

என்று அக்னியின் ஸ்தூபம் வானைத் தொடுவதாகக் குறிப்பிடுகிறது. தைத்திரீய ஸம்ஹிதை

விஷ்ணோ: ஸ்தூபோஸி

என்று விஷ்ணுவின் ஸ்தூபத்தைக் குறிப்பிடுகிறது. வேதகால அக்னியே புராண கால சிவபெருமான் என்பதால் சிவபெருமானுக்கும் விஷ்ணுவிற்கும் ஸ்தூபங்கள் வேதகாலத்தில் இருந்திருக்கலாம் என்று கருதுகின்றனர். 

ஸ்தூபம் என்பது குவிக்கப் பெற்ற பொருளைக் குறிக்கும். மண் முதலிய பொருட்களைக் குவித்து ஸ்தூபமாக கருதியிருக்கலாம் என்று கொள்ள வாய்ப்பிருக்கிறது.



Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

கல்வெட்டில் குற்றம், தண்டனை, தீர்வு