இராமாயணச் சுடுமண் பலகைகள்

 ராமாயணச் சுடுமண் பலகைகள்




ஹர்யாணாவிலுள்ள ஜஜ்ஜார் அருங்காட்சியகத்தில் ராமாயணக் காட்சிகள் சுடுமண்ணாலான பலகைகளில் காணப்படுகின்றன. அவற்றில் நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த ப்ராஹ்மி எழுத்துப் பொறிப்பும் காணப்படுகிறது. இவை வால்மீகி ராமாயணத்தில் இருந்து எடுத்தாளப்பட்ட செய்யுட்பகுதிகளாக உள்ளன. எடுத்துக்காட்டாக ஜடாயுவுடனான கற்பலகையில்

अन्तरा  रघुनन्दनः। आससाद महागृध्रम्
அந்தரா ரகு⁴நந்த³ன꞉. ஆஸ்ஸாத³ மஹாக்³ருத்⁴ரம்

என்னும் பொறிப்பு இடம்பெற்றுள்ளது. இது ஆரண்ய காண்டத்தில் 14 ஆம் ஸர்க்கத்தில் இடம்பெற்ற செய்யுட்பகுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இதைப் போலவே அசோகவாடிகையில் ஹனுமான் முதலிய காட்சிகளும் பொறிப்புக்களோடு இடம்பெற்றுள்ளன.

Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

கல்வெட்டில் குற்றம், தண்டனை, தீர்வு