பண்டைய நெடுஞ்சாலை
பண்டைய நெடுஞ்சாலை
பொயுமு 5 ஐச் சேர்ந்த பாணினி உத்தராபதம் என்று ஒரு நெடுஞ்சாலையைக் குறிப்பிடுகிறார். இது தக்ஷசிலாவிலிருந்து பிஹாரின் ராஜக்ருஹம் வரை அங்கிருந்து பாடலிபுத்ரம் வரையிலும் இருந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இடையில் இந்த்ரப்ரஸ்தம் அதாவது தில்லி, கௌசாம்பி மற்றும் வாராணாஸியுமுண்டு. அங்கிருந்து காந்தாரம் அதாவது ஆப்கானிஸ்தான் வரையிலும் நீண்டிருந்ததாகவும் கருதுகின்றனர். மற்றொரு சாலை ராஜகிரில் இருந்து ஆந்திரம் வரை பொயுமு ஐந்தில் இருந்ததையும் அறிஞர்கள் காட்டுகின்றனர்.
Comments
Post a Comment