தமிழகத்தில் மீமாம்ஸை
தமிழகத்தில் மீமாம்ஸை
வேதத்தை ஒட்டிய ஆறு மதங்கள் ஆஸ்திக தர்சனங்கள் எனப்பெறுகின்றன. இவற்றுள் ஒன்று மீமாம்ஸா. வேதப்பொருள் கூற பல்வேறு யுக்திகளைக் கொண்டு திகழும் மதம். இதற்குப் பூர்வமீமாம்ஸா என்ற பெயரும் உண்டு. இதன் ஸூத்ரங்களை ஜைமினி எழுதினார். பிறகு இது ப்ரபாகரர் குமாரிலர் ஆகிய குரு சிஷ்யர்களின் பெயரால் ப்ராபாகர மீமாம்ஸை என்றும் பாட்ட மீமாம்ஸை என்றும் இரண்டாகக் கிளைத்தது. முதலாம் பராந்தக சோழனின் திருநாகேச்வரத்துக் கல்வெட்டும் ராஜராஜனின் எண்ணாயிரக் கல்வெட்டும் ப்ராபாகர மீமாம்ஸை மட்டுமே பாடத்தில் இருந்தமையைக் குறிப்பிடுகின்றன. பாட்ட மீமாம்ஸை ஏனோ தமிழகக் கல்வெட்டுக்களில் பயன்பாட்டிலிருந்ததாகக் கிடைக்கவில்லை. மேலும் ராஜராஜன் காலத்தில் 20 காண்டங்களோடு மீமாம்ஸை பயின்ற செய்தி கிடைக்கிறது. இன்று இரண்டு மீமாம்ஸைகளோடு 16 காண்டங்கள் உள்ளன. இதோடு ஸங்கர்ஷண காண்டங்கள் நான்கு என்று கொண்டு 20 காண்டங்கள் எனக்கூறுவர்.எது எப்படியோ பத்தாம் நூற்றாண்டில் ப்ராபாகர மீமாம்ஸை மட்டுமே தமிழகத்தில் பாடத்திட்டத்தில் இருந்தது.
Comments
Post a Comment